பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்ற அருமையான தத்துவத்தை முன்வைக்கிறார். அடிகளார் சமய உலகம் தந்த சமுதாயச் சீர்திருத்தவாதி. சமுதாயப் புரட்சியாளர். தன்னம்பிக்கையின் பெருமை பேசவந்த அவர்,

தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் நம்பாது ஜோசியத்தை நம்புவது. இராசிப் பலனைப் படித்து மயங்குவது, ஆகிய கெட்ட பழக்கங்கள் ஊக்கக் கிளர்ச்சிக்கு எதிரானவை (250)

என்கிறார். ஜோசியம் பார்ப்பது தவறு என்று மட்டும் கூறவில்லை. ‘கெட்ட வழக்கம்’ என்கிறார். மானிட உள்ளத்தின், உளத்திண்மையின் சிறப்புப் பற்றிப் பேச வந்த அடிகளார்.

இந்த உலகத்தின் வேறுபட்ட வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் இன்று நம் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கும் மூலமும் முதலும் உள்ளமேயாகும். ஏன்? கோயிலில் கடவுளும் மனிதன் படைப்பேயாகும் (263)

என்று அறுதியிட்டுக் கூறும் அடிகளார் ஓர் அரிய அறிவுரையும் வழங்குகிறார்.

உள்ளமோர் விந்தையான பொருள்..... உள்ளத்தை ஒரு பொழுதும் ஓயவிடக்கூடாது. அதற்கு ஒழுங்காக முறை வைத்து வேலை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் (264)

நாம் குடியரசு நாட்டில் வாழ்கிறோம். அது வெற்றியடைய ஆட்சி பற்றிய நமது அணுகு முறை தெளிவுடையதாக இருக்க வேண்டும். ‘வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்’ என்ற தலைப்பில் வள்ளுவர் கண்ட அரசு பற்றிய சில சிந்தனைகளை முன் வைக்கிறார். வாக்குச் சீட்டுப் பற்றிய தமது கருத்தைக் கூற வந்த அடிகளார்,

நமது நாட்டில் கட்சி ஆட்சி முறைதான் இருக்கிறது. ஆதலால் தனி ஒருவர் தேர்தலில் கணிப்புக் குரியர் அல்லர். கட்சியின் அமைப்பு, கட்சியின் கொள்கை, கட்சியின் தலைமை, கட்சியின் சென்ற கால வரலாறு, ஆகியனவே கவனத்திற்குரியன ஆய்வுக்குரியன (278) என்கிறார். அவருடைய இன்னொரு அறிவுரையும் கவனத்திற் கொள்ளத்தக்கது.

நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் - பொழுதும், நல்லாட்சி நடத்தும் பொழுதும் சில தனி நபர்கள் பாதிக்கப்படலாம். அவர்கள் பெரியவர்களாகவும் கூட இருக்கலாம். ஆயினும் தயக்கம் கூடாது. நாட்டின் நலனுடன் சம்பந்தப்பட்ட காரிய சாதனையே குறிக்கோளாக அமைய வேண்டும். (279)

என அறுதியிட்டுக் கூறுகிறார். ஆட்சியாளர்கட்கு இது சில சமயங்களில் ஏற்படும் மயக்கம் தீர்க்கும் மருந்து. இருளசுற்றும் கை விளக்கு.

வாழ்க்கைத் துணை நல வாழ்த்து என்ற அத்தியாயத்தில் அடிகளார் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.

தமிழர் மரபில் கூட்டுக்குடும்பம் கிடையாது. கூட்டுக் குடும்ப முறை அயல் வழக்கு.

தி.IV.2.