பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



201



ஆனால் நம்முடைய நாட்டிலே, பகைப்புலத்தினாலே வந்த கேடுகளினாலே அரசர்கள் சிலர் போனதுண்டு.

இந்த நாட்டு மக்கள் இந்த அரசு சரியில்லை என்று கிளர்ச்சி செய்து, அரசை முடி துறக்கச் செய்ததாக இல்லை. காரணம், அரசன் அவன் உயிரையே அரச நீதியிலே வைத்திருந்தான்.

ஆக, அரசனுடைய இயல்பிலே அவனுக்குப் பார்க்கிற பொழுது, அவன் கடிது ஓச்சினான், ஆனால் மெல்ல எறிந்தான். அவனுடைய வாழ்க்கையிலே அந்த அமைப்பு இருந்தது என்பதைப் பார்க்கிறோம்.

இதுவரையில் மூன்று அமைப்புகள். அரசியல் அமைப்பிலே முக்கியமானவற்றைச் சொல்லிவிட்டோம்.

இப்போது ஜனநாயக உலகம், மக்களாட்சித் தலைமுறை. மிகச் சிறப்பான உரிமை. விமர்சன உலகம். யாரும் பேசவேண்டும். எதையும் பேசலாம். அரசு என்ன செய்கிறது என்பதைப் பேச உரிமை.

அமைச்சர் எங்கு போனார், என்ன சாப்பிட்டார், என்பதைப் பேசக்கூட உரிமை.

இதையெல்லாம் அரசியல் நாகரிகம் என்று நினைக்கத் தயாராக இல்லை.

அரசியல் மேதைகள் தரம் உயர்ந்தவர்களாக இருந்தால்தான் நாட்டு மக்களுடைய தரம் உயரும்.

ஏன் எனில் அரசியல், நாட்டு மக்களுடைய கவனத்தை ஈர்க்கின்ற ஓர் இயக்கம்.

இந்த நாட்டிலே மக்களாட்சித் தலைமுறை தோன்றி 20 ஆண்டுகள் ஆகியிருப்பதினால், இன்னும் 20 ஆண்டுகள் கழித்தால், நிச்சயமாக அரசியல் மேடைக்கு மக்கள் ஆர்வமாகப் போகமாட்டார்கள். தேர்தல்கள் மிகச்