பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சாதாரணமாக நடைபெறும். இந்த நாட்டு மக்கள் தகுதி பெற்றவர்கள் ஆகிவிடுவார்கள்.

ஆனால், இன்றைக்கு மக்களாட்சித் தலைமுறை தோன்றி வளர்ந்து கொண்டிருக்கின்ற காலமானதால், அவர்கள் வரி செலுத்துகின்ற பொறுப்பு, அரசியல் நண்பர்களுக்கும், அரசியல் மேதைகளுக்கும் இருப்பதனால், அவர்கள் விமர்சனம் செய்துகொள்ள உரிமை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தரம் குறைந்து விமரிசனம் செய்தால், அதை நாடு தாங்காது.

திருவள்ளுவர் விமரிசனத்தை ஒப்புக்கொள்ளுகிறார். விமரிசனத்தைத் தாங்கிக்கொள்ளுகிற சக்தி அரசுக்கு வேண்டுமென்று சொல்கிறார்.

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடைவேந்தன்’

என்கிறார். காதாலே கேட்க முடியாத சொற்களைச் சொன்னால்கூட நீ கவலைப்படாமல் தாங்கிக்கொள்ள வேண்டும்.

‘செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.’

389

நீ அரசை நீண்ட நாட்களுக்கு நடத்த வேண்டுமென்றால், தரம் குறைந்த வார்த்தைகளினாலே, செவிக்குக் கேட்கும்படியாகச் சொன்னால்கூடக் கவலைப்படாதே!

சீன நாட்டிலே இதற்கொரு வரலாறு சொல்வார்கள்.

ஓர் அரசன் ஆட்சி உரிமையுடையவன். ஆட்சி மனையிலிருந்து அலுவல் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்குக் கொடிய பகைவன் ஒருவன் தெருவிலே நின்று திட்டிக்கொண்டிருந்தான். பகல் முழுதும் திட்டிக்கொண்டே இருக்கிறான். அரசன் அவனுடைய வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். மாலையிலே அவன் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, அரண்மனைக்கு வருகிறபோது