பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அவன் வீட்டிற்குப் போகும்போதே அவன் உடம்பு வலி எடுத்துத் தூக்கம் வருமே.

காட்சிகளைப் பார்க்கின்றபோது பிணியின்மை இல்லாதிருத்தல் வேண்டும்.

"உடம்பார் அழியின் உயிரார் அழிவார்” என்றார் திருமூலர். நமக்கு இடைக்காலத்திலே பெளத்த, சமண மாயாவாதம் வந்த பிறகு, இந்த உடம்பைப் பற்றிய அக்கறையே போய்விட்டது. அந்தப் பெளத்த, சமண மாயாவாதங்கள் எல்லாம் இந்த உடம்பை ரொம்ப இழித்தும், பழித்தும், அது, இது என்று சொல்லியும், ‘அழிகின்ற உடம்புக்குப் பாதுகாப்பு எதற்கு?’ என்று சொல்லியும், கலைத்துவிட்டன.

ஆனால் திருமூலர் அதனைப் பார்த்துப் புரட்சி எழுப்பினார். "உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே” என்றார்.

நிலத்தை வளர்த்தால்தான் பயிரை வளர்க்கலாம்; அது போல நம்முடைய உடலைக் கருவியாகக்கொண்டுதான் இந்த உயிர் வாழ்க்கை நிகழ்கிறது.

அதனால்தான் நாட்டிலே ஒரு பழமொழிகட உண்டு. "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்று. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்றால், நல்ல நேரம், சந்தர்ப்பம், வேண்டிய மனிதர்கள் இருக்கின்ற போதே நம்முடைய காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது உள்ள அர்த்தம்!

ஆனால் இதன் பொருள் மிகவும் உயர்ந்தது.

இந்த உடம்புக்கும் உயிருக்கும் இடையே இருக்கும் கூட்டு இருக்கிறபோதே பாவத்தைத் தூற்றிவிட்டு, புண்ணியத்தை எடுத்துக்கொள். இந்த உடம்புக்கும் உயிருக்கும் இடையே இருக்கிற கூட்டை உறுதிப்படுத்துகிற அடையாளம்,