பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோவிலில் பேச வேண்டும் என்று கேட்டதற்கு ‘இன்றும், நாளையும்’ என்ற செய்தி கிடைத்தது. அறிவிப்பாளர் இன்றோடு கடைசிப் பேச்சு என்று சொல்லுகிறார். நான் இப்போது திருவள்ளுவரைப் பற்றிப் பேசுவதா, சேக்கிழாரைப் பற்றிப் பேசுவதா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இன்று சேக்கிழாரில் பேச்சை முடிக்கலாம் இந்தக் கூட்டத்திலே என்று இருந்தேன். இருந்தாலும் இன்றைக்கு நான் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் எடுத்துக் கொண்ட தலைப்பு, திருவள்ளுவரைப் பற்றிக் கடவுள் நெறி, கொள்கை, வாழ்க்கைப்போக்கு என்ற நிலையிலே எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். அந்தத் துறையிலேயே சிந்திக்கலாம். நான் கீழ்த்திசை நாடுகளுக்குப் போய் வந்த பின்பு ஒருநாள் பேசப் போவதாகச் சொல்கிறார்கள். அல்லது திருமுறை மாநாடு வருகிறது. பன்னிரு திருமுறைகளிலே சேக்கிழார் புராணமும் ஒன்று. எனவே, அப்பொழுது பெரிய புராணத்தைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டலாம். காரணம், எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் பெரிய புராணத்தில் நின்று சில கருத்துக்களை நாம் நினைவூட்டத் தவறினால், நம்முடைய சான்றோர்கள், முன்னோர்கள் செய்த மாற்றங்கள், எழுச்சிகள் மறந்து போகும். எனவே எந்த ஒரு சமயச் சொற்பொழிவானாலும், சேக்கிழாருடைய அடிச்சுவட்டை வைத்துச் சிந்திப்பது நல்ல பழக்கம். அன்றைக்குத் திருமுறை மாநாட்டில் நான் பெரிய புராணத்தைப் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன்.

திருவள்ளுவர் முதன் முதல் மானிடராகப் பிறந்த முறையில், மனிதர்கள் பேசுகிற முறையில், மனிதர்களுக்காக, அவர்களுடைய வாழ்க்கைக் கட்டுமானம் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலையில்; முதல் முதலாகச் சிந்தித்து ஒரு நூலைச் செய்கிறார். அது தமிழில் தோன்றியதால் தமிழ்மறையாகவும், அது உலகத்திற்கே பொதுமறையாக