பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


‘அடக்குதல்’ என்று பொருள் கொள்ளுகிறார்கள். ‘அழித்தல்’ பொறிகளை அழிக்க முடியாது. அழித்தலும் கடவுளுக்கு விரோதமானது. இயற்கைக்கு விரோதமானது. கடவுள் கொடுத்த பரிசை, கடவுள் கொடுத்த கொடையை, முறையாகத் துய்த்து மகிழ்ந்து வாழாமல், அவற்றை அழிப்பதிலே நமக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆகையினால்தான் காலையிலே நான் படித்த ஒன்றிலே கூட ‘விரதங்கள் எல்லாம் வேண்டாம்’ என்று ஞானசம்பந்தரே சொல்லுகின்றார். நீ விரதங்கள் இருந்து உடம்பை வருத்த வேண்டாம்.

பெளத்த, சமண சமயங்கள் வந்த பொழுது, அன்றைய நாயன்மார்கள் அதற்கு உடன்படாமல் எதிர்த்ததற்குக் காரணம், அவைகள் இந்த நாட்டினுடைய வாழ்வியலுக்கு முரணாக இருந்தன. இவன் பாட்டும், இசையும், கூத்தும் கேட்டு மகிழ விரும்புகிறான். மகிழ்ந்து கூத்தாட விரும்புகிறான். அவர்கள் ‘பண்ணொடு இசை கேளார்’ என்று சொன்னார்கள். இவர்கள் இயற்கையோடு இசைந்து வாழ ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. குறிஞ்சி நிலத்தை ஒட்டியும், முல்லை நிலத்தை ஒட்டியும், மருத நிலத்தை ஒட்டியும், பாலை நிலங்களை ஒட்டியும், இயற்கையை ஒட்டியும் ஒழுகலாறுகளை அமைத்து மிகச் செழிப்பாக வாழ்ந்தார்கள். ‘மலரிடை மணம் நுகரார்’ என்று சொன்னார்கள். இவர்கள் பழங்காலத்திலிருந்து ஐந்திணை, அகத்திணை வழியாக, அவனும் அவளுமாகச் சேர்ந்து வாழ்கின்ற வாழ்க்கைப் பேற்றில் வளர்ந்தவர்கள். அவர்கள் பெண்ணைக் கீழ்மைப் படுத்தி, ‘பெண் என்பது பாவமான பிறப்பு, வீடு பேறு இல்லை’ என்றெல்லாம் கீழ்மைப் படுத்தியதைப் பார்த்து, நம்முடைய நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் பிடிக்குப் பிடி ‘நமச்சிவாய’ என்று சொல்வதைப் போல இறைவனை அம்மையப்பராகவே சொல்லி, நாடு முழுதும் சுற்றிச் சுற்றிப் பரப்பினார்கள். ‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்தது’ என்று