பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் உணர்த்தும் இறையுணர்வு



229


பெரிது என்பதும் அல்ல. யார், எந்த வடிவத்தை நினைத்தார்களோ அந்த வடிவம்.

பிரெஞ்சில் அந்த மாதிரி ஒரு பழமொழியே உண்டு. ஒரு நாயைப் போய், கடவுளைக் கற்பனை செய் என்றால், அதனுடைய கற்பனா சக்தி எப்படிப் போகும்? தன்னைப் போல அது ஒரு நாயாக இருக்கும் என்று அது கற்பனை செய்யும். அதற்குமேல் அதற்குச் சக்தி போதாது. அதனால் தான், நம்முடைய நாட்டிலே கூட, கடவுளுக்குச் சாதம் படைக்கிறோம்; உடை உடுத்துகிறோம். அணிகலன் போடுகிறோம்; அதற்குக் கல்யாணம் செய்து வைக்கிறோம். உடனே பகுத்தறிவுவாதிகள் இதெல்லாம் சுவாமிக்கு வேண்டுமா என்று கேட்பார்கள். ஆனால் இந்த மனிதன் இருக்கிறானே, அவன் தன்னில் கடவுளை வேறாகப் பார்க்கவில்லை; அவன் உண்ணாத கடவுள் என்று இவனுக்குத் தெரியும். உண்பிப்பதில் இவனுக்கு ஒரு மன ஆறுதல். அது உறங்காத கடவுள் என்று இவனுக்குத் தெரியும். ஆனால் உறங்க வைக்கிறான். ஒன்பது மணிக்கு வழிபாடு முடித்துப் பள்ளியறைக்குச் சுவாமியை எடுத்துக் கொண்டு போய், அதைப் படுக்க வைத்து, ஊஞ்சல் ஆட்டிப் பார்க்கிறான். அவன் கடவுளை ஓர் உயிர்ப்புள்ள பொருளாக - தன் வாழ்க்கையில் பங்காளியாகக் கருதுகிறான்.

அது ஒரு சிலை; கண்ணுக்கு அப்பாற்பட்டது; கருத்துக்கு அப்பாற்பட்டது; கற்பனைப் பொருள் என்ற நம்பிக்கை இவனுக்குக் கிடையாது. உலகத்தில் மற்ற மதமெல்லாம் அப்படித்தான் சொன்னது. பயத்திலிருந்து மதம் பிறந்தது என்றே சிலபேர் சொல்லுகிறார்கள். பயத்திலிருந்து நமது மதம் பிறக்கவில்லை.

கேட்டால், கல்லை இடித்துக் கொண்டான். காலில் இரத்தம் வந்தது. உடனே கும்பிட ஆரம்பித்து விட்டான் என்கிறார்கள். இவ்வளவு பைத்தியக்காரனாக நம்முடைய