பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு வள்ளுவரின் அறிவுரைகள்



285



மக்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இன்று இறுக்கிக் கொண்டுள்ள அதிகாரச் செல்வாக்கு, பணச்செல்வாக்கு ஆகியவற்றின் பிடி விடுபட்டு, எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கை வழியில் ஆட்சி அமைவதற்குரிய எல்லா முயற்சிகளிலும் மக்கள் ஈடுபடவேண்டும்.

மீண்டும் தொகுத்து இக்கால வழக்கியல் வார்த்தைகளில் ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1. நாட்டை வளப்படுத்தி வாழக்கூடிய- நாட்டுக்குச் சொத்தாக இருக்கக்கூடிய குடிமக்கள் வேண்டும்.

2. பல குழுக்களாகப் பிரித்து உட்பகையை வளர்த்துக்கொண்டு நல்லாட்சிக்கு இடையூறு செய்யும் மக்கள் கூடாது. சாதி, மதம், கட்சிகள் பெயரால் சண்டையிட்டுக் கொள்ளாத மக்களாக இருத்தல் வேண்டும். அதாவது, சாதிகள் வளரக் கூடாது. பொது வாழ்க்கையில் மதங்கள் தலையிடக் கூடாது. (இந்தத் தீமையை அரசியல் கட்சிகள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ வளர்க்கக் கூடாது.)

3. மக்கள் நுகர்வுக்குரிய உணவு, உடை முதலியவற்றின் விலை கட்டுப்படுத்தப் பெறுதல் வேண்டும்.

4. வறுமை இருக்கக் கூடாது. தனி ஒருவர் வருவாய், வாழ்க்கைக்கு ஏற்றதாக அமையவேண்டும். (தனி ஒருவர் வருவாய் பற்றிய இன்றுள்ள கணக்கு முறை தவறானது. அதாவது கோடீசுவரனையும் கூழுக்கு அழுபவனையும் ஓரணியில் நிறுத்திச் சராசரி பார்க்கக்கூடாது.)

5. வேலை வாய்ப்பு வேண்டும். அதாவது உழைப்பதற்கு உரிமையும் வாய்ப்பும் வேண்டும். வேலைக்கு