பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளத்திற்குத் தக்க வாழ்வு அமைத்து ‘இல்லை’ என்ற சொல் இல்லாமல் செய்து, வருகின்ற விருந்தினை உபசரித்து அனுப்புவாளாயின் அவள்தம் குடும்ப நிர்வாகம், அன்பியல் தழுவிய வாழ்வியல் தலைவனுக்கு - கணவனுக்குப் பெருமையைத் தருகிறது. ஒரோவழி இழுக்கு வந்தாலும் அந்த இழுக்கு வழுக்கலாகிவிடாமல் தடுத்து மடை மாற்றி வாழ்வியலைச் செப்பம் செய்து உயர்த்துவதே வாழ்க்கைத் துணை நலம். திருநீலகண்டர் மனைவியும் கண்ணகியும் இதற்கு எடுத்துக்காட்டாவர்.

கண்ணகி தன் கணவனின் புகழை, தன் குடும்பப் புகழைக் காக்கவே பாண்டியனின் அரசவையில் போராடினாள். கணவனின் புகழைக் காத்தல் வேண்டும். குடும்பத் தலைமகள்-வாழ்க்கைத் துணைநலம் சோர்வற்றவளாகத் திகழ்தல் வேண்டும். வாழ்க்கைத் துணைநலமே இன்பத்திற்கு-அறத்தின் ஆக்கத்திற்கு, புகழுக்கு- அனைத்திற்கும் அடிப்படை.

‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.’

56

என்பது திருக்குறள்,

2

நாற்றங்காலில் நாற்று வளரும்! பருவம் வந்தவுடன் பறித்துக் கழனியில் நடப்பெறும். அந்த நாற்று பயிராகக் கழனியில்தான் வளர வேண்டும். கதிர் ஈன வேண்டும். கழனி பிடிக்கவில்லை என்று, திரும்ப நாற்றங்காலுக்கும் நாற்றுப் பயிர் வர இயலுமா! அது போலத்தான் பெண்! பெண்ணுக்குப் பிறந்த வீடு நாற்றங்கால்! திருமணம் செய்து கொண்டு புகும் வீடு கழனி. அப்பரடிகளும் தேவாரத்தில் "அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை"; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!" என்றார். ஆதலால் நீ