பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/309

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கைத் துணைநல வாழ்த்து



305


வரையில் கவனத்துடன் பேணி வளர்த்தால்-அறிவு நலமும் அன்பு நலமும் கெழுமிய நிலையில் வளர்த்தால் அந்தக் குழந்தை சிறப்புற வளரும். இந்த உலகை வென்றெடுக்கும் குழந்தையாக விளங்கும்.

குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால்தான் திருவள்ளுவர்,

‘பெறுமவற்றுள் யாமறிவ தில்லை; அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.’

61

என்றார். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்குவதுடன் பண்பாட்டுடன் பழக்கி வளர்க்க வேண்டும். எந்த அவைக்குச் சென்றாலும் முதலில் இருக்கும் நிலைக்குரிய தகுதியுடன் குழந்தையை வளர்க்க வேண்டும். நல்ல தாய், நல்ல தந்தை என்ற பெயரைப் பல்கலைக் கழகம் தர இயலாது. நம்முடைய குழந்தைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு, அளவு கோலாகக் கொண்டு நாடு வழங்குவதாகும்! ஆதலால், செல்வி! உங்களுக்குப் பிறக்கும் குழந்தையை நன்றாக வளர்த்துப் புகழுக்குரியவராக்குக! குழந்தை பிறந்தவுடன் எழுது. வாழ்த்துக்களும் விளையாட்டுப் பொறிகளும் அனுப்பி வைக்கின்றோம். உங்கள் குடி விளங்க வரும் மக்களுக்கு வரவேற்பு! வாழ்த்துக்கள்.

தி.iv.20