பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோறும் தூய்மை செய்து வாழ்க்கைக்கு உரியவாறு பயன்படுத்திக் கொள்ளலில் வெற்றி பெற்றவர்கள்.

4. குற்றங்குறைகளைக் கடந்து குணக் குன்றாக விளங்குபவர்கள்.

5. செயற்கரிய செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள்.

6. எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை கொண்டொழுகும் அருளாளர்கள்.

இவர்களைக் காணின் போற்றுதல்; அவர் தம்மைப் பேணுதல்; அவர் அருளும் மறை மொழிகளைக் கேட்டு அவ்வழி நடத்தல்.

குறிப்பு: இதனால் தோற்றத்தால் மட்டும் துறவிகளாக (சந்நியாசிகளாக) இருப்பவர் போற்றத்தக்கவர்கள் அல்லர் என்பது வெளிப்படை

4. அறம்

திருக்குறளில், அறம் என்பது ஒன்றேயாம். அதாவது "மனஙீகூஷிதுக்கண் மாசிலனாக வாழ்தலே அறம்”. இந்த அறத்தை வாழ்க்கையிற் பெறத் துணையாக அமையும் ஒழுக்கங்களையும், பெற்ற தூய்மையைப் பேணிப் பாதுகாத்தலுக்குப் பயன்படும் ஒழுக்கங்களையும் அறம் என்று ஏற்பது உலகியல் வழக்கு.

1. மனத் தூய்மையாகிய அறம் கெடாத வழியில் செல்வம் சேர்க்கலாம்; வீட்டின்பத்தையும் பெறலாம். அற வாழ்க்கையின் மூலம் பெறும் செல்வமே உயிர்க்குத் துணை.

2. சிந்தனை, செயல் ஆகியவற்றால் வாழ்க்கையின் துறைதோறும் இயன்றவாறெல்லாம் அறநெறிபேணல்.