பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமநிலைச் சமுதாய அமைப்புக்குத் திருக்குறள் முரணாகாது!



319


அவர்களே விரும்பிப் படைத்துக் கொள்ளக் கூடியதா? அல்லது அவர்கள் அல்லாத அவர்களுக்கும் மேம்பட்ட கடவுளின் செயலா? என்பது முதற்கேள்வி; முதற்சிக்கல்! உயிர், கடவுளின் படைப்பு என்ற கொள்கையில் உயிருக்கும் பயன் இல்லை; கடவுளுக்கும் பயனில்லை. அதுமட்டுமன்று. கடவுளுக்கு இந்தக் கொள்கை குறை கற்பிக்கும். அறியாமையும் குறைகளும் உடைய உயிர்கள் கடவுளால் படைக்கப்பட்டன என்றால் படைப்பாளனின் திறம் ஐயப்பாட்டிற் குரியதாகி விடுகிறது உயிர். கடவுளால் படைக்கப் பெற்றது என்றால் உயிர்களுக்குச் செயற்பாடு இல்லை. அதனால் வளர்ச்சி இல்லை தேக்கம்! வள்ளுவம் ‘உயிர்’ கடவுளால் படைக்கப்பெற்றதல்ல என்ற கருத்துடையது-உயிர் என்றும் உள்பொருள் என்பது குறளியம்.

மன்னுதல்=நிலைபெறுதல்

‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் கழ் நிறீஇத் தாமாய்ந் தனரே!’

(புறம்-165)

என்ற புறநானூற்றுச் செய்யுட் கருத்தை அறிக.

‘தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’

68

‘மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.’

244

என்ற குறட்பாக்கள் ‘உயிர்’ நிலையானது என்றே கூறுகின்றன. இக்கருத்தின் மூலம் ‘உயிர்கள் என்றும் உள்ளவை; படைக்கப் பெற்றவையல்ல’ என்பது உறுதிப்படுத்தப் பெறுகிறது. இதனால் பல்வேறு சிக்கல்கள் தோன்றாமலே போகின்றன.

‘உயிர், கடவுளால் படைக்கப் பெற்றது; உயிர்களின் இன்ப துன்பங்கள் கடவுளால் உயிர்களுக்கு வழங்கப்பெறுகின்றன’ என்ற கொள்கைகள் குமுகாய அமைப்பிற்கு ஊறு விளைவிக்கும் கொள்கைகள். இக்கொள்கைகளால்