பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/329

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளும் - துறவும்



325



அருள் உணர்வுக்கு இடர் விளைவிப்பது மனிதனுடைய புலன் உணர்வு. எதையாவது ஒன்றைத் துய்த்து மகிழ வேண்டுமென்ற அவா, புலன்களினுடைய இயற்கை. அவ்வியற்கையுணர்வு, முதலில் பெரும்பாலும் தான் துய்த்து மகிழ வேண்டுமென்றே தொடங்கும். அவ்வியற்கையுணர்வைத் தடுத்து மடை மாற்றிப் பிறரைத் துய்ப்பிக்கச் செய்தல் மூலம் தான் துய்த்ததாகவே கருதி மகிழ்கின்ற உணர்வைத் தோற்றுவித்து வளர்த்துக் கொள்ளவேண்டும். இங்ஙனம் புலன் நுகர்வைப் பக்குவப்படுத்திப் பழக்கும் பொழுது ஒன்றைவிட்டு ஒன்றைப் பக்குவப்படுத்துவதில் பயனில்லை. அதனால், ஆன்ம சக்தியே வீணாகும். ஒரு விடுபற்றி யெரியும் பொழுது ஒரு பக்கத்தில் மட்டும் தண்ணீர் விட்டு அனைத்து என்ன பயன்? ஆதலால், ஐம்புலன் நுகர்வு வேட்கையைத் தன்வழிப்படுத்திக் கொள்ளாமல் பிறர் வழிப்படுத்தும் பொழுது, துறவு கால் கொள்கிறது. தொண்டுணர்வு கருக்கொள்கிறது.

துறவு, மிகமிக உயர்ந்த இயல்புடையது. துறவு நெறி வெளிப்படுவது தோற்றத்தில் அல்ல. உள்ளடங்கிக் கிடக்கும் உள் உணர்விலேயே துறவு முகிழ்க்க வேண்டும். என்னுடையதென்று யாதொன்றும் வைத்துக் கொள்ளாதவரும் இஃதன்றி முடியாது என்ற வாழ்க்கைப் போக்கு இல்லாதவருமே உண்மைத் துறவியாக வாழ முடியும்.

‘உற்ற உறவினர்க்கு உடம்பும் மிகையே’

என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகு துறவுநெறி இந்த வையகத்தில் எங்கிருக்கிறது? என்று கேட்கக் கூடிய நிலையிலிருக்கிறது. ஒருவகையினர், எண்ணில் செவ்வத்திற்குரிய துறவிகளாக நம்மிடையே வாழ்கின்றனர். மற்றொரு வகையினர், வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியின்றிப் பிச்சை எடுக்கும் திருக்கோலமாகத் துறவுக் கோலம் பூண்டு நடமாடுகின்றனர். அவர்களிடத்துத் தோற்றத்திலேயே துறவு