பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
சிந்தனைச் செல்வம்


உலக முதல்வன்!

சிறப்புடைய காட்சிகள் நான்கு. கண்ணுக்குப் புலனாகும் காட்சி ஒன்று. அறிவுக் காட்சி பிறிதொன்று. உணர்வுக் காட்சி மற்றொன்று. நான்காவது காட்சி கடவுட் காட்சி; முதற்காட்சி, உயிர்க்குலம் அனைத்துக்கும் பொது. விலங்குகள், பறவைகள் கூட கண்களால் காணவும், தனக்குச் சார்பான ஒன்றை அணுகவும், பொருத்தப் பாடில்லாதனவற்றைக் கண்டு விலகவும் காண்கின்றோம்! எனவே, கண்களால் காணப்பெறும் காட்சி அளவில் உயிர்க் குலத்தினிடையில் வேறுபாடு இல்லை!

வளர்ந்த மானிடப் பிறப் பெய்தியவர்கள் கண்களால் காணப்பெறும் காட்சியை வாயிலாகக் கொண்டு படிப்படியாக நோக்கி வளர்ந்து, மிகுதியும் பயன்பெறுவர். மனிதன், கண்களால் மட்டும் பார்க்கும் காட்சியே பார்த்தல்; அப்பார்வையின் வழி, காட்சிப் பொருளின் உள்ளீடுகளையும் கூர்ந்து நோக்கி ஆராய்வதை நோக்குதல் என்பர். வளர்ந்த அறிஞர்கள் கண்களை வாயிலாகக் கொண்டு காணாதன