பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்



339


அகர வடிவில் இயங்குகிறது. ‘அ’ என்ற வரிவடிவத்தைக் கூர்ந்து நோக்குங்கள்! ‘அ’ என்ற எழுத்தின் ஆரம்பம் ஒரு வட்டம். வட்டத்தில் தொடங்கும் ‘அ’ எழுத்து வளைந்து கீழ் நோக்கி வருகிறது. திரும்ப மேலேறி வளைவின்றி நேராக வளைவைக் கடந்து வெளியில் சென்று ஒரு நேர்கோட்டு வடியில் முடிகிறது. ‘அ’ எழுத்தில் தொடங்கும் வட்டம் கடவுளின் நிறைநலம். கடவுள், உயிர்களை ஆட்கொள்வதற்காக இறங்கிவரும் நிலைகள் வளைந்த பகுதி. தொடக்க நிலையில் உயிர்கள் தன்முனைப்பாகக் கடவுளைப் பற்றிக் கருதாது முன்னே செல்லும்! வாழ்க்கையில் பல்வேறு, படிப்பினைகளைக் கண்ட பிறகு, உயிர்க்குத் தெய்வம் என்பதோர் சிந்தனை உண்டாகும்.

அதுபோதுதான் உயிர் கடவுளை அறிந்து அவன் வழி காட்ட அவன் பின்னே செல்வதை விளக்கும் பகுதி ‘அ’ வில் முன்னோக்கிச் செல்லும் நேர்க்கோடு. கடவுளை அறிந்து அவ்வழி நின்று ஒழுகும் உயிரின் நேர் நிலையை உணர்த்தும் பகுதி ‘அ’ எழுத்தின் வடிவுகளைக் கடந்து வலப்பக்கத்தில் நிமிர்ந்து நிற்கும் நேர்க்கோடு. நேர்மை என்பது ஒரு தூய்மையான அறநெறிப்பட்ட பண்பு!

எல்லா உயிர்களுக்கும் ஒப்ப நினைத்துச் செய்தலே நேர்மை என்ற அறம்! இதனை விளக்குகின்ற வகையில் அகர வடிவம் அமைந்திருப்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.’

1
யாருடன் போர்

மனித குல வாழ்வியலில் பகை, முற்றாக ஒதுக்கத் தக்கதுமன்று. அதனால் பகை, அறம் என்று ஏற்கத் தக்கதுமாகாது. பகை, மருந்து போல ஏற்றுப் போற்றப்படுகின்றது. அதாவது பகை கொள்ளும் இடம், பொருள், விளைவு