பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/365

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



361



தவம் செய்வார், தவத்திற்கு எதிரான-பழிக்கத் தக்க குற்றங்களில்லாமல் இருந்தாலே போதும். தலைமயிரை மழித்தலும், சடையாக்கலுமாகிய செய்முறைகள் வேண்டா.

பொருள்

தவத்தின் முயற்சியில் மழித்தலும் நீட்டலும் இயல்பாக நிகழுமாயின் குற்றமில்லை. கோலம் கருதி, முயன்று மழித்தலும் நீட்டலும் வேண்டாம்!

33. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வேம் எனல்.

282

பிறன் பொருளைக் களவினாலே கவர உள்ளத்தால் நினைத்தலும் தீது.

பொருள்

தீமை, களவு செய்தால் மட்டுமன்று. களவாட நினைக்கும் பொழுதே களவின் குற்றம் வந்தடைகிறது.

34. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.

291

வாய்மை எனப்படுவது யாதொரு தீமையும் பயவாத சொல்லேயாம்.

பொருள்

பிற நூலார் உண்மை என்று கூறுவது வாய்மையன்று. உயிர்க்குத் துன்பம் செய்யாத சொல்லே வாய்மைக்கு இலக்கணம்.

35. உள்ளிய வெல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

மனத்தினால் கோபத்தை நினையாதிருப்பின் நினைத்தன வெல்லாம் உடன் வந்தெய்தும்.