பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/377

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



373


பொருள்

துன்பத்திற்குக் காரணமாகிய தன்குற்றம் நோக்கி நகுதல் குற்ற நீக்கத்திற்கும் உதவி செய்யும்.

69. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்.

637

நூல் நெறியாற் செய்யுந் திறனை அறிந்திருந்தாலும், உலகத்தின் இயற்கையறிந்து செய்தல் வேண்டும்.

பொருள்

நூல்நெறியே ஆனாலும் உலகியலுடன் ஒத்து வராதன பயன்தரா.

70. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

646

பிறர் கேட்க விரும்புமாறு சொல்லுவதும், பிறர் சொல்லும் சொற்களின் பயனைக் கொள்ளுதலும் குற்றமற்றார் கொள்கை.

பொருள்

கூறும்போது விரும்பத்தக்கவாறு கூறுதலும், அமைச்சியலுக்குரிய பெருமையின் காரணமாகச் சொல்லினிமை நோக்காது பயன் நோக்கிக் கேட்டலும் வேண்டும்.

71. என்றும் ஒருனவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

652

புகழோடு அழகும் தராத செயல்களை ஒரு போதும் செய்யாமல் விலக்க வேண்டும்.