பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



1. இல்வாழ்க்கையின் இயல்பு, காதல் மனையாளுடன் கூடிக் கலந்து மகிழ்ந்து வாழ்தல்.

2. நன் மக்களைப் பெறுதல்.

3. பொருள் ஈட்டுதல்; ஈத்து மகிழ்தல்; துய்த்தல்.

4. சுற்றம், விருந்து பேணுதல்.

5. தென்புலத்தார், தெய்வம் போற்றுதல்.

6. புகழ் பெறுதலுக்குரிய அறவினைகளைச் செய்தல்.

7. இம்மை, மறுமை இன்பங்களைப் பெறச் செய்யும் முயற்சிகளில் தலையாயது இல்வாழ்க்கை. துறவாவது போன்ற அமைப்பில் துறத்தலும், இன்புறுதலும் அமைந்துள்ள இல்வாழ்க்கை முயற்சி சிறப்புடையது.

‘ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.’

48

தவம் செய்வோருக்கு உரிய உதவிகள் செய்து அவர் தம்மைத் தவநெறியில் நிற்கச்செய்தும், தாமும் தமது நெறியில் நின்றொழுகும் இல்வாழ்க்கை, தவம் செய்வாரின் தவத்தினும் சிறப்புடையது.

குறிப்பு: இல்லறத்தார் தவத்திற்குத் துணை செய்தலாகிய அறத்துடன் தமது இல்லற அறத்தினையும் மேற்கொள்வதால் சிறப்புடையதாயிற்று.

1. தவம் செய்வோர் தமக்குரியனவற்றைத் தேடாமல் அவர்களுக்கு வழங்குவதன் வாயிலாகத் தவத்திற்கு உறுதுணையாயிருத்தல். நுகர்வன தேடுவதன் வாயிலாகப் பொருட் பற்றுகள் வளரும். பாலுக்குப் பதில் பசுவின் மீது நாட்டமும் - பசுவுக்கும் புல் வளர்க்க நிலத்தின் மீது நாட்டமும் செல்லும். தவம் செய்வார்க்கு நுகர்வனவும் துய்ப்பனவும் தர வேண்டுமே ஒழிய மூலப் பொருள்களோ பணங்களோ