பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



39


தருதல் கூடாது. அங்ஙனம் முறைபிறழ்ந்து கொடுத்ததன் விளைவை இன்று நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

2. தவம் செய்வோர் தவம் செய்தற்குரிய சூழல்கள் அமைத்துத் தருதல்.

‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.’

49

இல்வாழ்க்கை அறம் என்று சிறப்பித்துக் கூறப் பெற்றதேயாம். அத்தகு இல்லற வாழ்க்கையும் மற்றவர்களால் பழிக்கப் படாமல் இருக்குமாயின் நன்று.

1. இல்வாழ்க்கை அறத்தின்பாற் பட்டதே. ஆனாலும் பழிப்புக்குரியதாக இல்லாமலிருத்தல் நன்று.

2. இல்வாழ்க்கையில் ஏற்படும் ஊடல், புலவி ஆகியன நீட்டிக்க அனுமதிப்பதன் வாயிலாக ஒழுக்கச் சிதைவுகள் தோன்ற அனுமதித்தல் கூடாது.

3. காதலர்களின் குறை - நிறைகள் தம்தம் நெஞ்சிற் கிடந்து திருத்தங்கள் காண முயலவேண்டும். அவை புறத்தே மற்றவர்களிடத்திலும் கடவுள் முன்னிலையிலும் கூறத் தக்கனவல்ல.

4. தம் வாழ்க்கை வளமாக அமைய மற்றவர் வாழ்க்கையைக் கெடுப்பதன் வாயிலாக வரும் பழியைத் தவிர்த்தல்.

5. காதல் மிகுதியால் தகாதன செய்யாதிருத்தல் (பெண் வழிச் செல்லுங் குற்றம்).

6. நன் மகனைப் பெறுதல் இருவரின் நோன்புவழி நடைபெறக் கூடியது. ஆதலால் நன் மக்களைப் பெறுதலுக்கிசைந்தவாறு இல்லறத்தினை அன்புத் தவமாக நிகழ்த்துதல்; மக்களை முறையாக வளர்த்தல்.