பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



காதலர்களிடையே நிலவ வேண்டிய மாறாத அன்பைக் கற்பு என்று சிறப்பித்துக் கூறுதல் மரபு.

கற்பு, திண்மையுடையதாதல் எங்ஙனம்?

1. காதல் வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கருதுதல்.

2. காதல் வாழ்க்கையில் நிகழவேண்டிய அன்பை நாள் தோறும் முறையாக வளர்த்துச் சோர்விலாது காப்பாற்றிக் கொள்ளல்.

3. அன்பு நிகழ்தலுக்கும் உறுதிப்பாடு அடைதலுக்கும் உரிய செயல்களை இல்லத்துப் பணியாட்கள் வாயிலாக அன்றித் தாமே செய்தல்.

4. இடையூறுகளும் சோர்வுகளும், உற்றுழி நிலையில் மாறாது நிற்றல்.

கற்பென்னும் திண்மை:

வாழ்க்கை நம்பிக்கையால் ஆவது; உறுதியான அன்பால் வளர்வது; வாழ்வது, யாதானும் ஒரு வகையில் உரிய தலைமகள் குறைப்பட்டுழி, இல்லாள் அக்குறைகளின் காரணமாகக் கணவனை இகழ்தல், காதல் செய்யாதிருத்தல், விலகிப் போதல், உடை அணிகள் இன்ப ஆசைகளால் பிற ஆடவர்களை நாடல் முதலியன பெண்ணின்பால் நிகழ்ந்தால் அன்பு குறையும்; ஒழுக்கம் குன்றும்; கற்புக் கெடும். இவ்வழி அவளும் பெருமை இழப்பாள்; கணவனுக்கும் தீங்கு செய்வாள்.

கற்பு உடையதாக அமைவதுடன் அது உறுதியுடையதாக வேண்டும். ஏன்? யாதானுமொரு காரியத்தைச் செய்ய ஆற்றல் மிக்க கருவியாகப் பயன்படுதல் வேண்டும். கற்பென்னும் திண்மை பெற்ற பெண்ணுக்குத் தெய்வங்களும் ஏவல் செய்யும்.