பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரு தந்தை, தம் மக்களுக்குச் செய்யக்கூடிய உதவி, கற்ற அறிஞர்களவையில் அவர்களை முதன்மைபெறத் தகுதியுடையராக்குதலே.

1. மக்களைச் சிறந்த கல்விகற்கத் தூண்டித் துணைநின்று வழிநடத்தி அறிஞராக்குதல்.

2. தம் மக்களைக் கல்வியுடையராக்குதலே பெற்றோரின் தலையாய கடமை.

‘தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’

68

தம்மைவிட தம் மக்கள் அறிவுடையராதல் இவ்வுலகத்து உயிர்களுக்கெல்லாம் இனிது.

1. பெற்றோரின் அறிவைவிட, மக்களறிவு சிறந்திருத்தல் வேண்டும். அங்ஙனம் சிறந்திருத்தலே வளர்ச்சிக்கு அடையாளம், அங்ஙனம் வளராதிருப்பின் தேக்க நிலையாகிவிடும். ஆதலால் தம் மக்கள் "தம் சொல்வழி நடப்பாரோ?” என்ற ஐயத்தில் தம் மக்களின் அறிவு மேலும் வளர உதவி செய்யாமலிருப்பது தவறு. மக்கள் அறிவின் வளர்ச்சி, பெற்றோருக்கே புகழ் தரும்.

2. தம் மக்கள் அறிவுடையராக இருத்தல் மாநிலத்துக் கெல்லாம் சிறப்புடையது என்று எண்ணி அறிவு வளர்ச்சிக்கு விரைந்து உதவி செய்க.

‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.’

69

தாய் தன்மகனைச் சான்றோன் என்று கூறக் கேட்டபொழுது, பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

1. மகன், புறத்திணைகளில் நாட்டுப்பணிகளில் ஈடுபடுத்தலுக்குரியவன்; அங்ஙனம் ஈடுபட்டுச் செய்யும்பொழுது