பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



71


2. மலர்ந்த முகத்தாலும், இனிய சொற்களாலும் இயன்றதைக் கொடுத்து உதவுவதாலும் மற்றவர்களை இன்புறுத்துக, அவ்வழி வறுமையைத் தவிர்க்கலாம்.

3. மற்றவர்களை இன்புறுத்தும் இயல்பில்லாதார் அடுக்கிய கோடி செல்வம் பெறினும் துய்த்தல் அரிது. அவருக்கு மற்றவர்கள் துணை நிற்கமாட்டார்கள்.

‘பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவருக்கு
அணியல்ல மற்றுப் பிற.’

95

ஒருவனுக்கு அணியாவன அடக்கமுடைமையும் இன்சொல்லுடைமையுமாம். மற்றுப் பொன்னாலும் மணியாலும் செய்யப் பெற்ற அணிகள் அணிகளாகா. பணிவும் இன்சொல்லும் உடனிகழும் பண்புகள்.

1. எல்லாரிடத்தும் எப்போதும் பணிவுடையோராக நடந்து கொள்ளுக.

2. உடற் பணிவுமட்டுமன்றி வணக்கமுடைய வாய்ச் சொற்களையும் பேசுக.

‘அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.’

96

இனிய முறையில் சொன்னால் தீயவை தேயும்; அறம் பெருகும்.

1. ஒளியை உண்டாக்கினால் இருள் அகலும். அதுபோலவே நல்லவற்றை நாடி, அந்த நல்லவற்றை இனிய சொற்களால் சொன்னால் தீமை அகலும்; அறம் வளரும்; நன்மை பெருகும்.

2. வாழ்க்கையில் தொல்லை - துன்பம் தீமையால் வருவது. இத்தீமையை நினைந்து கவலைப்பட்டாலும் அல்லது நீக்க முயன்றாலும் அது நீங்காது. அதற்கு மாறாகத் தீமையை, அவ்வழிப்பட்ட துன்பத்தை