பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



81



நடுவு நிலைமை யுடையவனின் செல்வம், அழிவு இன்றி அவனுடைய வரும் தலைமுறையினருக்கும் வலிமையுடையதாக அமைந்து பாதுகாப்புத் தரும்.

செப்பம்: பகை, நட்பு ஆகியவற்றின் காரணமாக மாறுபடாது சிறப்புடன் அமைந்த குணம் அல்லது பண்பு.

சிறந்த நடுநிலைமையுடையார் யாரோடும் பகை கொள்ளார்; ஒரோ வழி பகை வந்தாலும் பகை நட்பாகக் கொண்டொழுகும் இயல்பினைப் பெற்று விளங்குவதால் செல்வத்திற்கு அழிவு வராது. ஆதலால், செல்வம் நிலையாக அமைந்து அடுத்த தலைமுறையினருக்கும் பயன்படும்.

நடு நிலைமையுடையார் பகை, நட்புக் காரணமாகச் செல்வத்தை இழப்பதற்குரிய வாயில்கள் இல்லை. ஒரோ வழி இழப்பினும் அவர் தம் நடுநிலைக் காரணமாக மற்றவர்கள் அவர்களை வாழ்விப்பர்.

‘நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.’

113

நடு நிற்றலைத் தவிர்ப்பதின் மூலம் வரும் பொருள் நன்மையைத்தரினும் அப்போதே ஒழிய விடுக; பேணாது கைவிடுக.

1. நடுவு நிற்றல் என்ற பண்பை இழப்பதால் வரும் பொருள் நன்மையைத் தராது என்பதை “நன்றே தரினும்” என்றார்.

2. நடுவு நிற்றல் என்ற பண்பை இழந்து பெறும்

(அ) பிறர் பங்கைத் திருடுதல்,

(ஆ) மற்றவர் உழைப்பிற்குரிய ஊதியத்தைத் தராமல் சுரண்டுதல்,

(இ) வணிகத்தில் ஏமாற்றுச் செய்தல்,

தி.IV.6.