பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



87


இருக்கிறது. அதுபோல நடுநிலைமை, அறம் என்ற பெயரால் யாரிடமிருந்தும், பிரிந்து ஒதுங்குவது, ஒதுக்குவது என்பது கொள்கையும் அல்ல; கோட்பாடும் அல்ல. அந்த உறவுகள் நன்மையை அறத்தை அறிந்து சொல்லுவதில் தடையாக இருக்கக் கூடாது. புவியீர்ப்பு ஆற்றலை வெற்றிகண்டு உயிர்க்குலம் வாழ்வதுபோலச் சார்புகளின் காரணமாக நடுநிலை பிறழாமல் நாம் வாழக்கற்றுக் கொள்ளவேண்டும். நம்மைச் சார்ந்தோரையும் இம்முறையில் பழக்கி விட்டால் சார்புகள் காரணமாக நடுநிலை பிறழ வேண்டிய இன்றியமையாமை வராது. அதுமட்டு மன்று, நடுவுநிலை யுடையோர் அணி வலிமை பெறும்.

3. சொல், வாயோடு மட்டும் உறவுடையது அன்று. மனத்தின் மாட்சிக்கு - நடுவுநிலைப் பண்புக்கு ஏற்பவே சொல் அமையும். பயன் தரும்.

‘வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.’

120

பிறர் பொருளையும் தம் பொருள்போல் பேணி வாணிகம் செய்வார்க்கு வாணிகம் நன்றாக அமையும்.

1. தன்னயப்பு மிகவும் கொடுமையான நஞ்சு. தன்னயப்பு பிறர் பொருளையும் தம் பொருளாக்கிக் கொள்ளத் தூண்டும். இத்தூண்டுதல் இயக்கும் உணர்வுக்கே பேராசை என்று பெயர். பேராசை கூடாது.

2. “பிறர் பொருள்” என்பது ஆழ்ந்தகன்ற பொருளுடையது. இன்றைய உலகியலில் உள்ள வழக்கின்படி “சட்டங்களின் அடிப்படையில் உடைமையாகப் பெற்றிடுதலே” என்பதை உரிமைக்குச் சான்று என்று கொள்ளக்கூடாது. முறை கேடான வழிகளில் கூட,