பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




10


செல்வத்துப் பயன்


தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை நிழ்ற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவு மெல்லாம் ஒரொக்கும் மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே

- புறம் 180

நக்கீரனார் நற்றமிழ்க் கவிஞர்; தமிழ்ச் சங்கத்துத் தலைமைப் புலவர். நக்கீரனார் பெற்றிருந்த பெருமைகள் பலப்பல. ஆயினும் அவர்தம் சிந்தனை தூய்மையானது. அதனாலன்றோ கண்ணுதற் பெருமான் கவிதையிலும் குற்றங்காணும் துணிவு தோன்றியது. குற்றமற்றவனே குற்றம் காண்பதற்குத் தகுதியுடையவன். இன்றோ குற்றமுடையோன் தன் குற்றங்களை மறைப்பதற்கே பிறர் மீது குற்றம் காண்கிறான். பழி தூற்றுகின்றான். அதனால் எது குற்றம்? என்பதே இன்று முடிவு செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது. இஃது இன்றைய உலகியல் போக்கு. அதுமட்டுமன்று