பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எடுத்துக்காட்டு. கோவலனிடம் அருமையாகத் தென்பட்ட சிறந்த பண்பாடுகள் நிலைத்திருந்தால், அவன் சான்றோ னாகியிருப்பான்.

ஆதலால், மாதவியின் கானல் வரிப்பாடல் கோவலனை முறை பிறழ உணரச் செய்தது. மாதவியோ பெண். மேவிச் செல்லும் இயல்பைப் பெறாதவள். முடிவு, கோவலன் பிரிந்து விடுகிறான். கோவலன் மாதவியை விட்டுப் பிரியும் இடத்தில் இளங்கோவடிகள் ஊழைக் காரணம் காட்டுகிறார்.

ஆம்! கண்ணுக்குப் புலனாகக் கூடிய எந்தக் காரணமும், மாதவியைக் கோவலன் பிரியக் காரணமாக இல்லை; செவிக்குப் புலனாகும் காரணமும் இல்லை. கோவலனும் மாதவியும் தேர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள்; விடுதலறியா விருப்புடன் வாழ்ந்தவர்கள், ஒருநாள் அல்ல. பல நாட்கள் வாழ்ந்தவர்கள்.

திடீரென ஒரு நிகழ்ச்சி. அதுவும் நன்னிகழ்ச்சி, நற்கற்பனை, சிறந்த உருவகம். இவற்றை முறை பிறழ உணர்ந்து, கோவலன் பிரிகிறான் என்றால், ஊழைத்தவிர, வேறு என்ன காரணம் காட்ட முடியும்? அதுவும் இளங்கோவடிகளுக்கு, கோவலன் மாதவியை விட்டுப் பிரிவதில் உடன்பாடில்லை. எங்கெங்கோ சுற்றித் திரிந்த கோவலனை மாதவி ஒருமைப்படுத்தி வைத்திருந்தாள்.

திடீரென அந்த முயற்சிகள் தகர்க்கப்பட்டவுடன், இளங்கோவடிகள் காரணங்களைத் தேடிப்பார்க்கிறார். யாதும் அவருக்குத் தெரியவில்லை. உடனே ஊழின் மீது வைத்துப் பாடுகிறார், “யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்” என்று! இங்கு ஊழ் என்று வலியுறுத்தப்படுவதை, இந்தப் பிறப்பிலேயே உள்ள சென்ற காலப் பழக்க வழக்கங்கள் என்பதை உய்த்து