பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடக்கத்தின் காரணமாகத் தன் கடிதத்தின் சொல், தேர்ந்து தெளியாத சொல்-புன் சொல் என்று குறிப்பிடுகிறாள்.

“தாங்கள் பெற்றோர்குரிய பணிகளைச் செய்யாமல் குலத்திற் பிறந்து சிறந்த கண்ணகியோடு எல்லாருக்கும் வாழ்வளிக்கும் பூம்புகாரை விட்டு இரவில் யாரும் அறியாது சென்றது ஏன்?

அஃது அடியவளாகிய நான் செய்த குற்றத்தினாலா? நான் செய்த குற்றமாக இருப்பின் பெண் பேதைமையால் செய்திருப்பாள் என்று கருதிப் பொருட்படுத்தாது விட்டிருக்கலாம். அல்லது ஒறுத்துத் திருத்தி இருக்கலாம். கோவலனாகிய நீவிர் குற்றமற்ற காட்சியையுடையவர். நும் புகழுக்கு யாதொரு குற்றமும் வராது பாதுகாத்துக் கொள்க!” என்று திருமுகத்தை முடிக்கிறாள்.

இத்திருமுகத்தில் மாதவிக்குக் குடும்பப் பாசமும் நாட்டுப் பற்றும் வளர்ந்திருப்பதையும் பார்க்கிறோம். தான் இன்புறுவதை விட கோவலனின் புகழ் சிறப்புற அமைய வேண்டுமென்ற விருப்பம் மட்டுமே இருந்த தென்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒரே ஒரு இடத்தில் தனது நிலையை எண்ணி வருந்துகிற சொற்றோடர் விழுகிறது. ஆனால், வெளிப்படையாக இல்லை. உய்த்து உணர வேண்டிய ஒன்று.

அதாவது “குலப் பிறப்பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம்” என்ற சொற்றொடரில் கண்ணகி குலப்பிறப்பாட்டியாக இருந்ததால் கோவலன் அழைத்துச் சென்றிருக்கிறான்; தன்னை அழைத்துச் செல்லாததற்குக் காரணம். தான் குலப்பிறப் பாட்டியாக இல்லாதுதான் என்றுணர்கிறாள் போலும்!

ஆனால் இத் திருமுகம் வாயிலாக மாதவி, கோவலனை மாசின்றிக் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கை