பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






14


இளங்கோவடிகள் எண்ணம்
ஈடேறுமா?


இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம். சிலப்பதிகாரம் தோன்றுவதற்குச் சிலம்பு ஒரு கருவியே! சாதனமே! ஆனால் சிலப்பதிகாரம் எழுதப் படுவதற்குச் சிலம்பு மட்டுமே காரணம் அல்ல! அல்லது சிலப்பதிகாரம் பதிகம் கூறும்,

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறட் கூற்றாவதூ உம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூ உம்”

மட்டும் காரணங்கள் அல்ல. வேறு சில காரணங்களும் உண்டு. சில காரணங்கள் சிலம்பின் அடிகளிலே புலப்படுகின்றன. ஒரு சில காரணங்கள் உய்த்தறியக் கூடிய காரணங்களாகும்.

இளங்கோவடிகள் சேர அரச மரபில் தோன்றியவர். அன்றைய தமிழகத்தினுடைய அரசியல் சூழல்கள் அடிகள் அறிந்தவையே. அதாவது, தமிழ்நாடு பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்தது. தமிழரசர்கள் தம்முள் போரிட்டுக் கொண்டு நாட்டை அழித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில்