பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளங்கோவடிகள் எண்ணம் ஈடேறுமா?

223


இளங்கோவடிகள் தமிழகத்தை ஒன்றுபடுத்த எண்ணியிருத்தல் வேண்டும். தமிழின ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கத்துடனேயே சிலப்பதிகாரத்தை இயற்றினார் இளங்கோவடிகள். அதனால், மூன்று நாடுகளையும் தழுவிய ஒரு காப்பியத்தை இயற்றினார் என்று எண்ணுவது முறையே.

தமிழ் நாட்டில் மூன்று பேரரசுகளையும் இணைத்துச் செய்யப்பெற்ற காப்பியம் சிலப்பதிகாரம். சோழ நாட்டுப் பூம்புகாரில் தொடங்கி, பாண்டிய நாட்டு மதுரையைக் கடந்து, சேர நாட்டு வஞ்சி நகரில் காப்பியம் நிறைவு பெறுகிறது. இந்த மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய பரப்பளவில் வளர்ந்த தமிழ் மரபுகளை இளங்கோவடிகள் விளக்கியுள்ளார்.

வஞ்சிக் காண்டத்தில் தமிழ் இன மானம் பேசப்படுகிறது. செங்குட்டுவன் அரசவை மண்டபத்தில் வீற்றிருந்தபோது கூறிய வார்த்தைகளை செங்குட்டுவன் கேட்டு

“இமையத் தாபதர் எம்க்கீங்கு உணர்த்திய
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவதாயின் ஆங்கு அஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்”

என்று சினங் கொள்கின்றான். வடபுலம் நோக்கிப் படையெடுக்க எண்ணுகின்றான்.

‘வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுதவோர் கற்கொண்டு அல்லது
வறிது மீளும் என் வாய்வாள் ஆகின்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடி நடுக் குறூ உம் கோல னரசு”

(வஞ்சிக் கால்கோள்