பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

307


உண்டு. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான குடி மக்கள் அரசியல் பற்றிச் சிந்திப்பதே இல்லை. சிலர் அப்படிச் சிந்திப்பது பாவம் என்றே கருதுகின்றனர். நாட்டில் அற நெறியும் பண்பும் அமைதியும் சமாதானமும் நிலவ நல்லாட்சி தேவை. இதை அன்று வானரர்கள் உணரவில்லை. இன்று மக்களே உணரவில்லை. மூல பலப்படை வானர வீரர்களைக் கலக்கியது.

இராமன் போருக்கு எழுந்தான். அரக்கர்களை அழித்தான், அரக்கர் குலமே அழிந்தது என்று சொல்ல வந்த கம்பன் ‘நீதி மன்றத்தில் பொய்ச் சாட்சி சொன்னவர் குலம்போல அழிந்தது’ என்கின்றான். ‘வறுமையில் துன்பப்பட்டு இறப்போரைப் போல இறந்தனர்’ என்கின்றான்.

இலக்குமணன் வேலேற்றல்

விபீடணன் மீது இராவணன் ஏவிய வேலை ஏற்க, விபீடணன், சுக்கிரீவன், அனுமன், அங்கதன், இலக்குவன் ஆகியோர்களிடையே போட்டி ஏற்பட்டது. இலக்குவனே முந்தினான். வேலை மார்பில் ஏற்றான்; மூர்ச்சை யடைந்தான். அனுமன் கொண்டு வந்த மருந்தால் மறு முறையும் உயிர் பிழைத்தான். இந்தப் போரின் முடிவில், இராம - இலக்குமணர்களுக்கும் வானவர்களுக்கும் ஒரு தெளிவு பிறந்தது. அதுதான் அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பது.

இறுதிப்போர்

இராவணன் கோபுரத்தின் உச்சியில் ஏறிப் பார்க்கிறான். பின் அரண்மனைக்குச் சென்று, தான தருமம் செய்கிறான். மீண்டும் போருக்குப் போக ஆயத்தமானான். இப்போது மூன்றாம் முறையாக போருக்குச் செல்லும்போது, இராவணன் போக்கில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதாவது,