பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உட்பட்டவனல்லன். அவன், உலகத்தின் எத்திசையில் தோன்றும் சிந்தனையும் அது சிறந்ததாக இருப்பின் தனது சொந்தக் கருத்தாக ஏற்றுக்கொள்ளத் தயங்கியதில்லை. மொழி எல்லையில் பாரதி நின்றதுகூட மொழிப் பற்றினால் மட்டுமன்று. மனித குலத்தின் சிந்தனை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி தாய்மொழியில் ஏற்படுவதைப் போல், பிற மொழிகள் வாயிலாக ஏற்படுவதில்லை. இஃதோர் இயற்கை நியதி. இந்த நியதியை எளிதில் மாற்ற இயலாது. அங்கனம் மாற்ற முயன்றால் அஃது இயற்கையாகவும் இருக்காது. காலமும் பொருளும் அதிகம் பிடிக்கும். ஆக, மனித சமுதாயத்தின் நலம் கருதித்தான் மொழி எல்லையில்கூட நின்றான் பாரதி.

ஐந்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தும் அளவுக்கு நாம் வளர்ந்திருந்தாலும் உலகத்தில் நாள்தோறும் வளர்ந்து வரும் அறிவியல், தொழிலியல் நுட்பங்களை விளக்கும் நூல்கள் தமிழில் போதுமானவை வெளிவரவில்லை. சில நாடுகளில் உலகத்தில் எந்த ஒரு மொழியிலாவது ஒரு சிறந்த நூல் வெளிவருமானால் இருபத்துநான்கு மணி நேரத்துக்குள் மொழிபெயர்க்கப்படுவதாகக் கூறுகின்றனர். அத்தகைய விரைந்த முயற்சிகள் தமிழில் இல்லை. ஒரு கருத்துத் தோன்றிப் பல ஆண்டுகள் ஆனபிறகுதான் அந்தக் கருத்தைத் தாங்கித் தமிழில் நூல் வெளிவருகிறது. இந்த நூல் தோன்றி வெளியில் உலாவரும்போது அந்தக் கருத்து வளர்ந்து மாற்றம் அடைந்துவிடுகிறது. இது வாழ்க்கைக்கு உதவாத பழைமையாகி விடுகிறது. இந்த நிலைமைகளை மாற்ற, சிறந்த முறையில் இயங்கும் ஒரு தமிழ் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்க வேண்டும். இக் கழகம் தமிழை அறிவியல் முறையில் சிந்தித்து வளர்த்தலும், பிற மொழிகளில் தோன்றும் நூல்களை விரைந்து தமிழில் கொண்டுவந்து சேர்த்தலும் ஆகிய பணிகளை செய்யத் தக்கவாறு அமைய வேண்டும். அப்போதுதான் தமிழ் வளரும்; தமிழகத்தின்