பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

103


எதிர்காலம் சிறப்புறும்; அப்போதுதான் மேற்றிசை மொழிகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தலாம்; தமிழ் மொழியின் இளமையையும் என்றும் காப்பாற்ற முடியும்.

தமிழ்நாடு அரசு, இந்த வகையில் சிந்திப்பது, சிந்தித்து செயல்படுவது நல்ல பயனைத் தரும். அப்படி தமிழ்நாடு அரசு முன்வராது போனால் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் முன்வந்து ஒரு மக்கள் நிறுவனத்தைத் தோற்றுவித்துச் செயற்படுவது அவசர அவசியக் கடமை. காலத்தின் கடமை என்பது நமது கருத்து.

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.


சொல்லவும் கூடுவதில்லை-அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை.
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவியிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
இந்தவசை யெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர்எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்."பாரதி


தேமதுரத் தமிழோசை...


பாரதி, பன்மொழி பயின்றவன். ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் அவனுக்குப் பயிற்சி உண்டு. ஆனாலும் பாரதியைக் கவர்ந்த மொழி தமிழ் ஒன்றேதான். தமிழ் இனிமை நிறைந்த மொழி.

"கனியிடை ஏறிய சுளையும்-முற்றல்
கழையிடை ஏறிய சாறும்