பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சுப்
பாகிடை ஏறியசுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிர்இள நீரும்
இனியன என்பேன் எனினும்-தமிழை
இன்னுயிர் என்பேன் கண்டீர்!"

என்கிற பாவேந்தன் பாரதிதாசன் பாட்டு அனுபவத்தில் முகிழ்த்த பாட்டு.

தமிழுக்கு இனிமை எப்படி வந்தமைந்தது? தமிழ், காலத்தால் மூத்த மொழி. வையகத்தில் உள்ளோர் கையசைத்து அடையாளங்காட்டி வாழ்ந்த காலத்தில் தமிழ்த் தாய் தமிழ் மக்களின் நாவை அசைத்தாள். தமிழில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றியது இலக்கண நூல். இலக்கியம் கண்டு வளர்ந்த பின்னர்தான் இலக்கணம் தோன்றும் என்பது மொழி நூலறிஞர் கருத்து. இன்று. கிடைத்திருக்கும் பழந்தமிழ் இலக்கணநூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்திற்கும் முந்தியது அகத்தியம். அந்த அகத்திய நூற்பாக்கள் சில கிடைத்துள்ளன. பல்லாயிரம் ஆண்டுகள் மக்கள் நாவில் பழகிப் பழகி இனிய தமிழாக விளங்குகிறது.

தமிழ் இனிமையானது என்றால் செவிப்புலனுக்கு மட்டுமன்றி வாழ்க்கைக்கும் இன்பமளிக்கும் இனிமையுடையது. உலக மொழிகளிலெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. ஆனால் தமிழில் உள்ள தொல்காப்பியத்தில் வாழும் மனிதருக்கும், வாழ்க்கைக்கும் கூட இலக்கணம் செய்யப் பெற்றுள்ளது. காதல் மனை வாழ்க்கைக்கு 'அகத்திணை' என்றும், சமுதாயக் களத்தில் நிகழ்த்தும் வாழ்க்கைக்குப் 'புறத்திணை' என்றும் இலக்கணம் செய்யப் பெற்றுள்ளது. அன்று மனையற வாழ்க்கையும் சமுதாய வாழ்க்கையும் சிறந்திருந்ததனாலேயே புகழ் பூத்த வாழ்க்கையாகத் தமிழினத்தின் வாழ்க்கை