பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றும் எச்சரிக்கை செய்கின்றான். பாரதியின் எச்சரிக்கை நியாயமானது. ஆனாலும் பாரதியின் எச்சரிக்கை வழக்கம் போல நமது தமிழ்ச் சாதியின் காதில் விழவில்லை. அல்லது விழுந்தும் விழாததைப் போல் வாழ்கிறது. ஆக்கமான புதுமைகளைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், சமுதாயத் துறையில் பயனற்ற, நெறிப் பிறழ்வுகளைத் தரக்கூடிய கலப்படங்கள் உண்டாகி செழுந்தமிழ் வழக்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழரின் பொருளியல் திறம் இன்று இல்லை. தமிழர் போற்றிய மனையறம் இன்று இல்லை. போலித் துறவுகள் அத்தாணி மண்டபம் ஏறுகின்றன. பெண்ணின் பெருமை பேணப்படவில்லை. கடவுள் வாழ்வுப் பொருளாக இல்லை. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் பெருநெறி இல்லை. ஒப்புரவு நெறியில் நடைபெறும் வாழ்க்கையும் இல்லை. இந்தச் சீரழிவுகள் தமிழ்ச் சாதி தனது தனித்தன்மையை மறந்ததால் வந்த கேடு. இதனை நினைத்து பாரதி "மாறுக! சார்புகளுக்குத் தக்கவாறு மாறுக! மாற்றம் வளர்ச்சியின் பாற்பட்டதாக இருக்கவேண்டும். மாற்றம் தமிழ்ச் சாதியின் தனித் தன்மைக்கு ஊறு செய்யக் கூடாது; தனித் தன்மையை இழக்கக்கூடாது" என்று எச்சரித்த எச்சரிக்கையை இனிமேலாவது தமிழர்கள் கேட்பார்களா? பின்பற்றுவார்களா?

"சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா இருந்து நின் னருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?”

(தமிழ்ச் சாதி-வரி 7-10)


சிதைவுற்று அழியும் பொருள்களில் சேர்ப்பையோ?

பாரதி ஒரு தத்துவஞானி. பழைமையை அறிந்தவன்; பழைமைகளைப் பாராட்டுபவன். ஆயினும், மாற்றங்களை-