பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

115


பரவலான கொத்தடிமைத்தனத்தை நெருக்கடி காலத்தில் தான் அகற்ற முடிந்தது. அதுவும் இன்னும் முற்றாக நீங்கியபாடில்லை. இது நெற்றியில் கொத்தடிமை என்று எழுதிக் கொண்டு வாழ்வோரின் இலக்கணம், சுதந்திரமாகத் திரிபவர் போலத் திரிந்து கொண்டிருப்பவர்களிடத்திலேயே அடிமை உணர்வு நீங்கியபாடில்லை. நீங்க வேண்டும் என்ற ஆசையும் ஆட்சியாளர்களிடத்தில் அரும்பவில்லை. இங்ங்ணம் மனிதர்கள் - மனிதர்களிடத்தில் அடிமை உணர்வுடன் பழகுவதிலிருந்தே நாடு இன்னும் விடுதலை பெற்றுவிடவில்லை என்பதாகிறது. ஆனால், அதற்குள் சிலர், இறைவனுக்கு அடிமை பூணவாவேண்டும் என்று கேட்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், பாரதி தெளிவாகவும் உறுதியாகவும் சொல்கிறான். "பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பாடுகிறான். இறைவன் பரிபூரணனாக இருப்பதாலேயே நாம் அடிமை செய்கிறோம். அந்த அடிமை விரும்பி அன்பினால் ஏற்றுக் கொள்ளப்படும் அடிமை என்ற சமயத் தத்துவம் பாரதியின் கவிதையில் அடங்கிக் கிடக்கிறது.

ஒருமைப்பாடு வேண்டும்
1965ஆம் ஆண்டில் அடியிற் கண்ட வரிகள் நாடு முழுவதும் பாடப்பெற்றன.

{{block_center|

"பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்"

என்னும் வரிகள் தாம் அவை. பாரதியின் இந்த வரிகள் இந்திய மக்களின் ஆவேச உணர்வாக மாறி பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையே நடந்த போரில் வெற்றியைப் பெற்றுத் தந்தன. ஆனால், போரின் வெற்றிக்குப் பிறகு இந்த நினைவு நாம் இந்த நாட்டின் மக்கள் என்னும் நினைவு தொடர்ந்து இல்லை. ஏன்? ஒரு நாட்டின்