பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

135


"நாமிருக்கும் நாடு நமது" என்ற உணர்ச்சி இல்லாததே காரணம். அன்பு கூர்ந்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்!"

இன்றைக்கும் கூட "நாமிருக்கும் நாடு நமது” என்ற உணர்வு எத்தனை விழுக்காட்டு மக்களுக்குத் தோன்றியிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாடு விடுதலை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேலான பிறகும் கூட இந்த நாட்டின் சுதந்திரத் திருநாளை அரசாங்க எந்திரங்கள் மட்டும்தான் கொண்டாடுகின்றன. அதனுடைய உறுப்புக்களாக இருக்கின்றவர்கள் மட்டுமே கொண்டாடுகின்றனர். இந்த நாட்டில் மக்கள் எழுச்சியோடு கொண்டாடுகிற விழாவாக இன்னும் விடுதலை பெற்ற திருநாள் வராத ஒரு குறையை நாம் இன்றும் பார்க்கின்றோம். ஆக, நாட்டுப்பற்று இன்னும் நமக்குச் செழித்து வளரவில்லை. இன்னும் நாட்டில் ஆத்திரங்கள், ஆசைகள் அலை மோதுகிறபோது நாட்டின் பொதுச் சொத்துக்களைத்தான் நாம் பாழாக்குகின்றோம் என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

நமக்குத் தவிர்க்க முடியாத கோபங்கள் வரலாம். அல்லது நம்முடைய ஆசைகள் நிறைவேறாது போகலாம். அதற்காக நம் நாட்டினுடைய புகைவண்டிகளையும் பேருந்துகளையும் பாழாக்குகின்ற மனப் போக்கைப் பார்த்தால் வேதனை ஏற்படுகிறது. இவை வேறு யாருடைய சொத்துக்களோ என்று கருதுகிறார்கள் போலத் தெரிகிறது. இது என்னுடைய சொத்து, இதில் ஒரு சிறிய ஆணி பழுதுபட்டாலும் அது எனக்கு இழப்பு; எனது நாட்டுக்கு இழப்பு என்கிற மனப்போக்குதான் நாட்டுப் பற்று.

பாரதி சொன்னவாறு, "நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்' என்ற உணர்வுகள் வளரவில்லை. அதிலும் பாரதி தென் தமிழ்நாட்டிலிருந்து பாடுகிறான். தமிழ் நாட்டின் எல்லையிலே இருக்கிறவன் பொதிகை மலையோடு