பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களாகச் சில மக்களும் இருந்திருப்பார்கள் என்பதிலே கருத்து வேறுபாடு இல்லை.

ஆனால், அரசே இயக்கி இயங்குகிற இயக்கம் வேறு, தாங்களாகவே மக்கள் ஆவேசம் கொண்டு இயங்குகிற இயக்கம் வேறு. அரசு ஒரு விரிவான ஆய்வுக் கூடத்தை அமைத்து விஞ்ஞானிகளை அமைத்து ஊதியம் கொடுத்து ஆய்வு செய்வது என்பதை விடப் பல்கலைக் கழகங்கள் அமைந்திருக்கிற, வட்டத்தில் அறிஞர்கள் தனியே ஓர் ஆய்வுக்கழகத்தை அமைத்து அவர்களுடைய ஓய்வு நேரங்களிலே சமுதாய அமைப்புக்களைப்பற்றி ஆய்வு செய்து நாட்டுக்குப் பரிந்துரையும் எடுத்துரையும் செய்கின்ற போது நாட்டுக்குத் தியாகம் செய்கின்ற அறிவியலறிஞர்கள் - மேதைகள் உருவாவார்கள். அந்தப் போக்கு வளரவேண்டும். அந்தத் துறையில் பாரதியின் கனவுகள் நனவாகவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

அதனால்தான் தமிழைப்பற்றி பாரதி நினைத்த போது "பிற நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்று சொன்னான். அவன் சாளரங்களை நன்றாகத் திறந்து வைக்கச் சொன்னான். எந்தச் சாளரத்தையும் அவன் சாத்தச் சொல்லவில்லை. அதே சமயத்தில் சாளரங்களின் வாயிலாக வரும் வாடைகளால் இந்த நாட்டின் தமிழ் கெட்டுப் போகக்கூடாது என்றும் நினைத்தான்.

அவன், உலகளாவி நிற்கின்ற மற்ற மொழிகளோடு தன்னுடைய தாய்மொழியாகிய தமிழ் ஈடும் இணையுமற்று இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான், அது நிறைவேறவில்லை. "மெத்த வளருது மேற்கே புத்தம் புதிய கலைகள்" என்று நினைவுபடுத்தினான்.

அந்தக் கலைகள் தமிழில் வராது என்று எவனோ சொன்னான். பாரதிக்குக் கோபம் வருகிறது. அந்தக்-