பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தயாராக இல்லை. எந்த நாடு எந்த முடிவு எடுத்தாலும் இந்தியா ஒருநாடு என்பதற்கு எதிராக முடிவெடுக்க முடியாது. அப்படி எடுத்தால் இந்த உலகத்திற்கு அது நல்லதல்ல. அதே நேரத்தில், நான் இந்தியனாக இருப்பதனால் தமிழனாக இருப்பதற்குரிய தகுதியை இழந்து விடுவேன் என்ற அச்சத்தையும் உண்டாக்கக் கூடாது.

நான் தமிழனாக இருப்பதால் இந்தியனாக இருக்க முடியாது என்று சொல்வது இருக்கிறதே அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்து. நான் தமிழனாகவும் இருக்க முடியும், இந்தியனாகவும் இருக்க முடியும். ஏன்? நம் சிந்தனையில், செயலில் வாழ்க்கைப் போக்கில் வளர்ந்தால் உலகத்தின் உயர் குடிமகனாகவும் கூட இருக்க முடியும்.

முரண்பாடுகள் என்பது பிளவுகளுக்கும், பிரிவினைகளுக்கும் உரியன அல்ல. தெளிவாகச் சொன்னால் இந்தியாவில் இப்போது முரண்பாடுகளே கிடையாது. வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றன. இவைகளை நாம் தீர்க்க முயன்றால் எளிதில் தீர்வு காண முடியும்.

எனவே, பிற நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் கொண்டுவந்து சேர்த்துத் தமிழை வளமான மொழியாக வளர்க்க வேண்டுமென்று பாரதி ஆசைப்பட்டான். அந்தக் கனவு நினைவாகவில்லை.

எல்லோரும் ஒன்றுஎன்னும் காலம்வந்ததே பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம்வந்ததே-இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சகக் காரருக்கு நாசம் வந்ததே.


பொதுவுடைமைச் சமுதாயம்

அமரர், பாரதி வாழ்ந்த போது நம் நாட்டு மக்கள் தொகை என்ன என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது