பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது மாவட்ட ஆட்சித் தலைவருடைய ஆணை, "ஆய்வு செய்யப்பா! என்ன, சந்தேகமாக இருக்கிறதே! இந்த இடத்திலே இந்த வீடு இவ்வளவு பெரியதாய் வளர்கிறதே! இதைக் கொஞ்சம் ஆய்வு செய்ய வேண்டும்!" என்று புலனாய்வு செய்கிற முயற்சி இருக்கிறதே-அதைத்தான் திருவள்ளுவர் "நினைக்கப்படும்” என்று கோபத்தோடு சொல்கிறார்.

“நினைக்கப்படும்” என்பதற்குக் கவனத்தில் கொண்டு ஆராயப்படும்; குறைகள்-நிறைகள் ஆய்வு செய்யப்படும் என்றுதான் பொருள். ஆக, இந்த நாட்டின் சராசரி மனிதனுடைய வருமானம் உயர்ந்தால்தான் சமநிலைச் சமுதாயம் உருவாக முடியும். தயவு செய்து ஒன்றை மறந்துவிடாதீர்கள்! எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிற ஒரு சமுதாய அமைப்புத் தோன்றாவிடில் நம்முடைய காவல் சக்தி பெருகி, பூட்டுக் கடைகள் பெருகும், பெருகிவிடும்.

ஒரு நாட்டில் காவல் துறையினர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரவேண்டும். குற்றவியல் நீதிமன்றங்கள் குறைந்துகொண்டே வரவேண்டும். ஆனால், நம்முடைய நாட்டில் இவைகள் எதிர்நீச்சுப் போட்டு வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. எனவே, பொதுவுடைமைச் சமுதாயம் மலர வேண்டும். எல்லாரும் எல்லாவற்றையும் அடைந்திட வேண்டும் என்று கருதினான் பாரதி. இந்தக் கனவு நனவாகவில்லை.

அடுத்து, இந்த நாட்டின் வலிமைக்கு மிகத் தடையாக இருப்பவை இந்த நாட்டிலிருக்கிற சாதி, குலகோத்திரச் சண்டைகள். கிட்டத்தட்ட இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளாக இந்த மனப்போக்கை நாம் எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட இந்தச் சமுதாயம் நகர்ந்து கொடுக்கமாட்டேன் என்கிறது. "யாதும் ஊரே யாவரும் கேளீர்!" என்று தொடங்கிய கவிஞன் காலம்