பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

153



ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை, ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பர்
இந்தியாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒரு நிகர்
சமானமாக வாழ்வமே.


தேசிய ஆறுகளாக வேண்டும்



இந்தியா ஒரு நாடு என்பதை வற்புறுத்தினேன். நாடு என்பதை செயற்பாட்டிலும் காட்ட வேண்டும். உண்மையில், கிடைத்த செய்திகளின்படி பார்த்தால் வடபுலத்தில் வெள்ளத்தால் மாநிலங்கள் பாழாகின்றன. தமிழ்நாட்டில் வறட்சியால் பயிர்கள் வாடுகின்றன.

நாம் விடுதலை பெற்று முப்பத்தைந்தாண்டுகளாயின. நம்முடைய சாலைகள் எல்லாம் தேசிய நெடுஞ்சாலைகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றன. நம்முடைய புகைவண்டித் தடங்களெல்லாம் தேசியமயமாக்கப் பட்டிருக்கின்றன. டில மாநிலங்களை இணைக்கின்ற ஆறுகளையெல்லாம் தேசிய ஆறுகளாக்கக் கூடாதா? இதைப் பற்றியெல்லாம் நம்முடைய அரசியலறிஞர்கள், ஆட்சியாளர்கள் சிந்தனையார்கள் எண்ணிப் பார்த்து முடிவு சொல்ல வேண்டும் என்பதற்காக பாரதி சொன்னான்,

"வங்கத்தில் ஒடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!"


என்று எவ்வளவு பெரிய திட்டம் போடுகிறான்!

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!