பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

155



நனவாகியிருக்கிறது!



பாரதி "படிப்பு வளருது” என்று சொன்னான்! "பாவம் தொலையுது” என்று சொன்னான்! பாரதிக்கு படிப்பின் மீது எவ்வளவு ஆர்வம்! "வீதிதோறும் இரண்டோரு!” பள்ளி என்று சொன்னான்.""வயிற்றுக்குச் சோறிட வேண்டும், பயிற்றிப் பல கல்வி தந்திட வேண்டும்" என்று சொன்னான். "தேடு கல்வி இல்லாததோர் ஊரைத் தீக்கொளுத்தி விடவேண்டும்” என்று சொன்னான்! நாம் தைரியமாகச் சொல்லலாம் - பாரதியின் இந்தக் கனவு நிறைவேறியிருக்கிறது! இதனைச் செய்த அரசுக்குக் கடமைப் பட்டிருக்கிறோம்.


பாவம் தொலைந்ததா?

ஆனால் இந்தப் படிப்பு வளர்ந்ததனாலே பாவம் தொலைந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். படிப்பு வளர்கிற பொழுதே அதற்கு நிழலாக ஒன்று வரும் என்று பாரதி நினைத்திருக்கிறான் போலத் தெரிகிறது.

"படித்தவன் சூது பண்ணினால் ஐயோ என்று போவான்" என்று சொன்னான். படித்தவர்கள் என்று சொன்னால் அவர்கள் சமுதாயத்திற்கு எதிராக இருப்பார்களோ என்ற கருத்து தெரிந்தோ தெரியாமலோ வளர்ந்து வருகிறது. அதை நாம் உண்மையென்று ஒத்துக்கொள்ளாது போனாலும் அப்படியொரு கருத்து இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்!

நீங்கள் நாட்டு நலனை மனதில் கொண்டு போராடி உங்கள் வாழ்க்கை ஊதியத்தை உயர்த்திக் கொள்வதிலே மறுப்பு இல்லை. ஆனால் நம்முடைய உணர்ச்சிகள் நாட்டின் நடப்பையே தடுத்து நிறுத்தி விடுகின்றன. நாம் உலகிற்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும.