பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மகிழ்ந்து கலையிலும் இலக்கியத்திலும் ஈடுபட்டார்கள். ஒரு யாம வழிபாடு என்று சொல்கிற அர்த்த சாமத்தை நிகழ்த்திய பிறகு நல்ல நாதசுரக்காரர்கள் அருமையாக இசை முழக்கம் செய்வார்கள். மக்கள் ஆங்காங்கு இருந்து மகிழ்ச்சியாகக் கேட்பார்கள். அந்த மகிழ்ச்சியில் திளைத்துத் திளைத்து மகிழ்ந்த பிறகு வீட்டிற்குப் போனால் நிம்மதியாகத் தூங்கினார்கள். அப்பொழுது மக்கட் தொகை குறைவாக இருந்தது. இன்றைக்கு அந்த வாய்ப்பு அவனுக்கில்லை. இசையும் கலையும் கூட வசதி படைத்தவர்களுடைய வாய்ப்பாக இன்றைக்கு மாறிப் புதிய புதிய “சபாக்கள்" தோன்றிக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிற அளவுக்குப் போய் விட்டன.

திருக்கோயில்களைப் பொறுத்தவரையில் அந்த வாய்ப்புகள் மிகக்குறைவாகப் போய்விட்டன. எனவே இந்த நாட்டுத் திருக்கோயில்கள் மீண்டும் பழைய காலத்தைப் போல, கலையும், இசையும், இலக்கியமும் களிநடம் புரிகின்ற கோயில்களாக மாறிக் குடிமக்களைத் தழுவினால் இந்த நாட்டின் முன்னேற்ற வாழ்க்கையில் சராசரி ஏழை மனிதனும் துணையாக நிற்பான் என்பதிலே கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

இதைத்தான் பாரதி, விடுதோறும் கலையின் விளக்கம்' என்று சொன்னான். "வீட்டுக்கு வந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குடும்பத் தலைவன் சொல்வதை இன்றைக்குப் பார்க்க முடிவதில்ன்ல. வீட்டுக்கு வந்ததும் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்: "என்னமோ போலிருக் கிறது வேறு எங்காவது போய்விட்டு வரலாமா?” என்று சொல்லி திரைப்படக் கெர்ட்டகைக்குப் போகிறார்கள்; வேறு எங்காவது போகிறார்கள். ஆனால், மேலை நாடுகளில் வீட்டுக்கு வருவதையே மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள். 'Happy Home" என்று சொல்கிறார்கள். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் இப்படியிருந்த வீடுகளைப் பார்க்கிறோம்.