பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாம் ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது வாழ்க்கையில் உரிமைகளின் பாற்பட்டதாகவும், கருத்துக் களின் பாற்பட்டதாகவும் இருக்க வேண்டுமே தவிர பெண்ணை அடிமைப் படுத்துகிற மனப்போக்கு கூடாது.

இந்தப் பெண் அடிமையை ஒழிக்கின்றதில் நம்முடைய நாடு முடியாத நிலையிலே ஏதோ தத்தளித்து அசைந்து கொடுத்திருக்கிறதே தவிர பாரதியின் கனவு நனவாகவில்லை. ஏதோ அங்கும் இங்குமாகச் சில ஒதுக்கீடுகள் தருவதினாலேயே பெண்கள் வெற்றி பெற்றுவிட மாட்டார்கள். அவர்களைத் துரத்தில் பார்த்தால்கூட தாய், சகோதரி என்று மதிக்கிற உணர்ச்சி, தகுதி, மரியாதைகள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாய மனப்போக்கு மாறும். இந்தத் துறையிலும் பாரதியின் கனவு நனவாகவில்லை.

"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்."


ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள்

கடைசியாகப் பாரதியினுடைய முக்கியமான கருத்து ஒன்று. "ஒன்று பரம் பொருள்; நாம் அதன் மக்கள் உலகு இன்பக் கேணி" என்று சொன்னான். கடவுள் ஒருவர்தான். நிச்சயமாகப்பல கடவுள் இல்லை, சத்தியமாக இல்லை; நாம் நம்ப வேண்டும். அதனால், மாணிக்கவாசகர், "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று சொன்னார். தென்னாட்டிலே சிவன் என்கிற பெயராலே சிலமக்கள் கும்பிடுகிறார்கள்; அதனைத் தான் வேற்று நாட்டு மக்கள் வேறு வேறு பெயரில் கும்பிடுகிறார்கள். இந்தத் தத்துவத்தை இந்த நாடு ஏற்றுக்கொண்டது. அதனால் குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்த அரசு இல்லை. எல்லாச் சமயங்களுக்கும் கடவுள்