பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



உழவும் தொழிலும் வளர்ந்தால் இந்த நாடு பல்கிப்பெருகி செல்வம் கொழிக்கும் என்று நம்பி, நாடு விடுதலை பெற்றவுடனேயே நிறைவேற்ற வேண்டிய ஐந்தாண்டுத் திட்டங்களை வரைந்து கொடுத்தான். அந்தத் திட்டங்களிலே, ஆயுதங்கள் செய்யச் சொன்னான்; சாலைகள் அமைக்கச் சொன்னான். கங்கையின் மிகை நீரை மையத்து நாடுகளுக்குப் பாய்ச்சச் சொன்னான்.

அவனுடைய கனவுகள் பலவற்றை அரசுகள் நிறைவேற்றிக் கொண்டு வருகின்றன. நாடு மகத்தான தொழிற்புரட்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பொதுவுடைமைச் சமுதாயம் அமையாமையின் காரணமாக சிலர் செல்வந்தர்களாகின்றார்கள். பலர் ஏழைகளாகிறார்கள்.

இலர் பலராகிய காரணம் என்ன என்று அன்றைக்குத் திருவள்ளுவர் கேட்ட குரல் இன்றைக்கும் பாரதியின் வாயிலாகக் கேட்கிறது. இலர் பலராகியது ஏன் என்ற வினாவை, "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” என்று ஆய்வு செய்து இந்த நாட்டு அரசு சம நீதி வழங்க முயற்சி செய்ய வேண்டும். அரசின் பொருளுற்பத்தி சாதனைகள் வியந்து பாராட்டக் கூடியவை; ஒப்பற்றவை. விநியோகத்திலிருக்கிற கோளாறுகள் நீக்கப்பட வேண்டும்.


விடுதலை நாள்



இந்த நாடு பல்வேறு கனவுகளை நனவாக்கியிருக்கிறது. அவற்றில் மணிமுடியாக நாடு விடுதலை பெற்றிருக்கிறது; பாரதி கண்ட கனவு நனவாகியிருக்கிறது. கனவிலே தான் அவன் விடுதலை பெற்றான். ஆனால், நனவிலே நாம் விடுதலை பெற்றோம். நம் நாடு விடுதலை பெற்ற பிறகு "நாமிருக்கும் நாடு நமது" என்ற உணர்ச்சி இன்னும் தோன்றவில்லை. நாட்டு விடுதலை நாளை "மக்கள்