பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



'தமிழ் எங்கள் இளமைக்குப் பால்'

என்றும்,

'உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே

என்றும் பாடுகிறார்.

'தனியொருவனுக்கு உணவில்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம்'

என்ற பாரதியைவிட,


'உலகம் உண்ண நீ உண்;
உடுத்த உடுப்பாய்'

என்ற பாரதிதாசன் வளர்ந்துதான் இருக்கிறார், கவிதை வளர்ந்துதான் இருக்கிறது. சகத்தினை அழித்திடுவோம்' என்று உணர்ச்சி வேகத்தில் பாரதி பாடி விடுகிறார்: ஆத்திரத்தின் உச்சியில் நின்று பாடுகிறார், பாரதிதாசனுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது. எனவே,


'நடத்து உலகத்தை நான்கு புறமும்
உள்ள சுவரை இடித்துவிடு'

என்று பாடுகிறார். வேற்றுமைகளையெல்லாம் விட்டு நாட்டோடு நாடு இணைத்து மேலேறு என்று பாடுகிறார். 'உடைமை அனைத்தும் மக்கட்குப்பொதுமை என்று பாடுகிறார்.

குளத்தில் விழுந்தவனை எட்டிப் பிடித்துக் காப்பாற்றத் தான் கை என்பதுபோல சமுதாயத்தில் வீழ்ச்சியுற்றவர்களை எழுச்சியுறச் செய்து வாழ்விக்கத்தான் கவிதை,

பாரதிக்குப்பின் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று கூற முடியுமா? மனித சமுதாயம் வளர்ந்திருக்கிறது - வளர்ந்து கொண்டிருக்கிறது - வளரவேண்டும். அது வளர வில்லை என்பது பிற்போக்குத்தனமானது. உணர்ச்சி