பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

189



அது பொருந்தாது. உலகம் தாயன்பால் இன்று நேற்று வளரவில்லை. உழைப்பின் பயனை அனுபவிக்கும்போது பயன் நல்கிய, முன்னோர் உழைப்பை மறக்கக் கூடாது. பின் பரம்பரை முன்னோடியாக இருந்து பயன்தந்த முன்னோரை மறக்கக் கூடாது என்பதற்காகவே - நன்றியறிதல், மாம்பழத்தைத் தின்றவன் அதைத் தரும் வகையில் உழைத்த தன் முன்னோரை மறக்காது போற்ற வேண்டும் என்பதற்காக, நீ உன் பின் பரம்பரைக்காக அதன் கொட்டையை நடவேண்டும் என்று கூறப் பெற்ற கருத்து சிறப்புடையது.

பாராட்டும் பண்பு - முன்னோரைப் போற்றும் பண்பு - நன்றியறிதல் சமுதாயத்திற்கு மிகமிக இன்றியமையாத தாகும். எனவேதான் எத்தகைய தீய செயல் செய்த போதிலும் இழிசெயலில் ஈடுபட்டபோதும் நன்றியறிதல் வேண்டும். "ஆன்முலையறுத்த அறனிலோர்க்கும் பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் கழுவாய் உண்டு" என்ற புறநானூறு,


"ஒருவன் செய்தி கொன்றோர்க்கு
உய்தி இல்லென அறம்பாடிற்று"

என்று கூறுகிறது. எனவே சுதந்திரத்தை அனுபவிக்கும் நாம் அதைத் தருவதில் முக்கிய பங்கு வகித்த தேசியப் பாடல்களை மறக்காது போற்ற வேண்டும்.

கோகலே, வ. உ. சி, காந்தி, குருகோவிந்தர் போன்ற தேசிய இயக்கத் தலைவர்களைப் பற்றிய பாடல்கள் காலங்கடந்தவை அல்லவா? அவர்களது வரலாற்றை அறிய இன்று தெளிவான வரலாறு இல்லையா? பள்ளிக்கூட வரலாற்று ஆசிரியர் போதுமே. எனவே அவர்களைப் பற்றிய அப்பாடல்கள் காலங் கடந்தவைதான் என்கின்றனர்.

சிறை சென்று அடி உதை பட்டு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் தந்த தலைவர்களைப் போற்றுவது - வணங்குவது - நினைப்பது நன்றியுணர்வின் பாற்பட்ட-