பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

191


ஒன்றுபடுமாறு ஊக்குவித்த அந்தப் பாரதியின் பாடல் காலங்கடந்ததா, அது நமக்கு வேண்டாமா?


"செப்புமொழி பதினெட்டுடையாள்-எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்"

என்று பாடினான் பாரதி.

இன்று பல்வேறு மொழிகளைப் பெற்றிருக்கும் பாரத நாடு சிந்தனையால் ஒன்றாய் விட்டதா? இல்லை. ஒன்றாக்க - சிந்தையால் ஒன்றாக்க முயற்சித்து வருகிறோம். ஆற்றில் பிள்ளையார் கட்ட முயற்சிப்பது போல முயல்கிறோம். காலம் சற்று நீடித்தாலும் இறுதியில் வெற்றியடைவோம். ஒத்து ஊதுபவனுடைய ஒத்து ஒலி, நாதசுரத்திலிருந்து வேறாக வேறுபட்டு ஒலித்தாலும் அவன் ஊதும் சுதி நாதசுரத்துடன் ஒத்திருப்பது போல, மொழிகள் பலவாக - பதினெட்டாக வேறுபட்டிருப்பினும் அம்மொழிகள் பேசும் மக்களது சிந்தனை ஒத்திருக்க வேண்டும். ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறான். சாதியைத் தொலைப்பதில் - பொருளாதார ஏற்றத் தாழ்வைப் போக்குவதில் - அனைவரும் இந்தப் பாரத நாட்டின் குடிமக்கள் - நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதில் சிந்தனை ஒன்றாய் இருக்கவேண்டும் என்கிறான். ஆகவே மொழி வேறுபட்டாலும் சிந்தனை ஒன்றுபடாத இந்தக் காலத்தில் அச்சிந்தனையை ஊட்டும் - வற்புறுத்தும் பாரதியின் பாடல் வேண்டாமா?


புவியிசை தருமமே அரசியலதனினும்
பிற இய லதனினும் வெற்றிதரும் என
வேதம் சொன்னதை முற்றும்பேண
முற்பட்டு நின்றார் பாரத மக்கள்


என்று பாடுகின்றான்.

சுதந்திர காலத்தில் மக்களுடைய நோக்கத்தை எல்லாம் சுதந்திரம் பெறுவதில் செலுத்தச் செய்த நாம்