பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுதந்திரமே குறிக்கோளாக - இலட்சியமாக வைத்த நாம் சுதந்திரம் பெற்ற பிறகு அத்தகையதொரு சிறந்த இலட்சியத்தை மக்கள் மன்றத்தின் முன் வைக்கவில்லை - மறந்து விட்டோம். இன்று நாட்டு நலத் திட்டங்கள் பல தீட்டிச் செயல்படுத்தும் நோக்குடன் முன்னேறும் நாம் அவற்றைவிடச் சிறந்த - சாதி வேறுபாடு இல்லை - எல்லாரும் ஓர் குலம் - எல்லாரும் ஓர் நிறை - எல்லாரும் இந்தியப் பெருநாட்டின் குடிமக்கள் என்ற பெரியதொரு இலட்சியத்தை மக்கள் மன்றத்தில் நிறுத்தி மக்களை எழுச்சியுறச் செய்ய மறந்து விட்டோம். சமதர்ம சமுதாய அமைப்பை வலியுறுத்தி இலட்சியமாக்க மறந்தோம். மக்களது இலட்சியமாக ஆக்கவில்லை.

அரசியல் ஆட்சி, போகும் வரும். ஆனால் நீதி - அறம் என்றும் நிலையாக நிற்பது - மாறாதது - அழியாதது. ஆயினும் இன்று மக்களிடம் அரசியலுக்கு இருக்கும் மோகம் எல்லா மனிதருக்கும் சோறு போட வேண்டும் என்பதில் இல்லை. எல்லார் வயிற்றையும் நிரப்ப வேண்டும் என்பது போன்ற நீதியை - அறத்தை வற்புறுத்தும் பாரதியின் பாடல் வேண்டாமா?

"கோத்திரம் ஒன்றாய் இருந்தாலும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்"

பிறந்த பிறப்பால் - பாரத நாட்டுக் குடிமகன் என்ற ஒத்த நிலையால் ஒன்றாய் இருக்கும் நம்முன் பொதுவாகக் கருத்து வேறுபாடிருக்கக் கூடாதாயினும் ஆங்காங்கு கருத்து வேறுபாடு உண்டாவது இயற்கை அப்படிக் கருத்து வேறுபாடு கொண்டவனை நோக்கித் தாழ்த்தி - இழித்துப் பழித்துப் பேசுவது தவறு. தாம் கொண்ட வேறுபட்ட கொள்கைகளுள்ளும் ஒற்றுமை காண்பதுதான்.அறிவுடைமை. வேறுபட்ட புளிப்பும் கார்ப்பும் உவர்ப்பும் துவர்ப்பும் கசப்பும் சேர்ந்து அறுசுவை உணவு அமைதல் போல