பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

207


என்ற அழியாத உண்மையை அறிவுறுத்துகிறான். தருமத்திற்கு மாறானவை அப்போதைக்குத் தலைதுாக்கி நின்றாலும் அது வெற்றியாக மாட்டாது என்பதைத் தலைவர்கள் நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டும். சகிப்புத் தன்மையே சாசுவத வெற்றிக்கு அடிப்படை என்ற எண்ணம் அர்ஜூனனுக்கு. ஆயினும் அவனது வீரவுணர்வும் தன்னம்பிக்கையும் மாய்ந்து விடவில்லை. பாடலைப் பார்ப்போம்.

"தருமத்தின் வாழ்வதனைச் சூதுகவ்வும்; தருமம்
மறுபடி வெல்லும்" எனுமியற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழிதேடி விதி
இந்தச் செய்கை செய்தான்
கருமத்தை மேன்மேலுங் காண்போம் இன்று
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம்மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்,
தனுவுண்டு காண்டீபம் அதன் பெயர்"

என்கின்றான். தரும நம்பிக்கையும், அத்தோடு, தன்னம்பிக்கையும் தலைவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை வையத் தலைவன் பாரதி நன்றாக எடுத்துக்காட்டுகிறான் இல்லையா? காந்தீய உணர்விலே ஊறிய பாரதி தலைவர்களுக்குச் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்; கொள்கை வேறு வாழ்க்கை வேறு என்று இருக்கக் கூடாது; அப்படி மாறுபட்டிருப்பவர்கள், சமுதாயத் துரோகிகள் என்று வசனத்தில் எழுதுகிறார். நிலையான வெற்றி வேண்டில் அறமான செயல் வேண்டும் என்பது பாரதி காட்டும்வழி. "ஜெயம் நிலையாக செய்வதற்கு அறமே சிறந்ததோர் மார்க்கம்” என்று மாஜினியின் மூலம் நமக்கு எடுத்து விளக்குகிறார். மேலும் மாஜினியின் மூலம் பூரணத் தியாகத்திற்குத் தயாராக இருப்பவனே தலைவனாவான் என்பதை,