பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கென முயலும் நோன்பு செய்யக் கூடாதா? என்றெல்லாம் கேட்கிறான்!

பாரதி, தனது கேள்விகளுக்கு விடையில்லாமல் போகவே, இந்த உலகத்தைக் கூர்ந்து நோக்குகிறான்! அடடா! மனித உயிருக்கு எத்தனை எத்தனை கஷ்டம்? கொலை, துரோகம்! ஐயகோ, எத்தனை அநியாயம்? ஐயோ, பாவம்!” என்று சொல்லிவிட்டு, மனிதர்களுக்கு வாழும் நெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்துகிறான்.

"மனிதர்களே! நமக்குள் ஒரு கட்டுப்பாடு செய்து கொள்வோமே! அந்தக் கட்டுப்பாடு யாதெனில், ஒருவனுக்கு ஒருவன் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை, பயப்படுத்துவதும் இல்லை; பயப்படுவதும் இல்லை.

மனிதர்களே! இந்த விரதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இதுவே, பிழைக்கும் வழி! வாழும் நாட்கள் சிலவே! இந்த நாட்கள் சிலவற்றுக்குள்ளும் கலகம் செய்து வாழ்வானேன்? இதனால் யாருக்கு என்ன பயன்?

மனம் விட்டுப் பேசுங்கள்! கலந்து பழகுங்கள்! பரஸ்பரம் நல்லெண்ணத்தை - நம்பிக்கையை பரிவர்த்தனை செய்து கொள்ளுங்கள்! அன்பு செய்யுங்கள்! அன்பைப் பெறுங்கள்! குற்றங்களைப் பார்க்காதீர்! குணங்களையே கண்டு பாராட்டுங்கள்! குற்றங்கள் தாமே மறையும்!

மனிதனுக்கு மனிதன் பகை என்பது மூடத்தனமானது. இயற்கை நியதிகளுக்கு முரணானது. மனித நாகரிகத்தின் மூலம், அன்பே! இன்பத்தின் வைப்பு. அன்பேயாம் என்கிறான்.

அன்பு! - மனித உலகத்தில் அன்பு எளிதாகத் தோன்றி விடாது. நிலத்தில் பயிர் எளிதில் வளருமா? அதுபோலத் தான்! அன்புக்குப் பகை அழுக்காறு-பொறாமை! பொறாமைக்கு களம் வளமை-வறுமை. இருவேறு நிலைக்களன்கள்!

வெறும் சோற்றுக்கே கூடப் பஞ்சம் நிலவுமாயின் அன்பு தோன்றுமா? ஒரு சிலர் உண்டு மகிழ்ந்திடலாம்! பலர்,